நீங்கள் வெற்றியை வழிபடுகிறீர்கள் - J.Krishnamurti
🔸 நீங்கள் வெற்றியை வழிபடுகிறீர்கள்.
நாம் எல்லோரும் ஏதாவது ஆக விரும்புகிறோம்.
ஒரு போர் வீரன், கோடீஸ்வரன்.கதாநாயகன் என்று.......!!!
ஏதாவது ஆக வேண்டும் என்ற நினைப்பே அமைதிக்கு எதிராக செயல்படுவது.
ஏதாவது ஆக வேண்டும் என்பதே நிர்ப்பந்தம்.
இனி ஆவதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையே அமைதி அளிக்கும்.
பிரார்த்தனை மூலம் ஒன்றை அடையும் போது பிரார்த்தனை வெற்றி பெருகிறதே தவிர நீங்கள் இல்ல.
அது சுயத் தன்மையின் வெளிப்பாட்டை மறைப்பதாகவே அமையும்.
இதுவே உண்மையான நிலை.
ஏனெனில் சுயத் தன்மையில் தான் நாம் எதையும் உருவாக்க முடியும்.
Be creative. அதுவே நிஜமான நிலைமை. State of being.
உங்களின் உண்மையான தன்மையின் வெளிப்பாடு.
ஆனால் அது சமூகக்கட்டுக்கு முற்றிலும் அன்னியமானது.
நீங்களோ வெற்றியை வழிபடுபவர்கள்.
நீங்கள் அடைய வேண்டிய பட்டங்கள், பதவி, அதிகாரம் இது போன்றவற்றைத்தரும் வெற்றியே உங்கள் கடவுள்.
உங்களுக்குள் ஓயாத போராட்டம் தான் நடந்து கொண்டே இருக்கிறது. அமைதியே இல்லை.
நீங்கள் ஏதாவது ஆக முன்னேற விரும்புவதால் இப்போராட்டம் உங்களுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அமைதி ஒருபோதும் இல்லை.
ஒன்றை நினைவில் கொள்ளவும்.
இயந்திரங்களே முன்னேறும்
எண்ணங்கள் தானாக மாறுவதைத்தவிர ஒரு போதும் முன்னேறுவதில்லை.
செய்யவேண்டியதை விழிப்புணர்வோடு செய்தாலே போதும் எல்லாம் சாத்தியமாகும்.
சாத்தியமும், சத்தியமும் நம்முள்ளே இருக்கிறது 🔸
🔹 ஜெ. கிருஷ்ணமூர்த்தி 🔹
J.Krishnamurti

Comments
Post a Comment