Google

அறிவு என்பது ஞானம் ஆகாது - OSHO




அறிவு என்பது ஞானம் ஆகாது ..
அறிவு ஒரு தகவல் களஞ்சியம் ...

விஷய ஞானம் வளர வளர நீ விடுதலை ஆவதற்கு
பதிலாக அது உனக்கு ஒரு சுமையாகிறது ...

அறிவு உன்னுடைய அனுபவத்தின் மூலம் வரும்
போது அது ஞானமாகிறது ...

இந்தப் பிரபஞ்சம் ஒரு விசித்திரம் ...
இந்தப் பிரபஞ்சம் ஓர் அற்புதம் ...

இந்தப் பிரபஞ்சம் ஓர் ஆச்சரியம் ...
இந்தப் பிரபஞ்சம் ஓர் பிரமாண்டம் ..

இந்தப் பிரபஞ்சத்துக்கு உன்னைச் சரணாகதி
ஆக்குவது தான் ஞானத்தின் ஆரம்பம்...

ஞானத்தோடு இருப்பது என்பது அறிவாளியாக
இருப்பது அல்ல ...

ஞானத்தோடு இருப்பது என்பது உன்னுடைய
பிரக்ஞையில் ஏதோ ஒன்றை அனுபவித்திருப்பது ...

ஒரு ஞானி எந்த விஷய ஞானத்தையும் சேகரித்து
வைத்துக் கொள்வது இல்லை ..

அவருடைய ஞானம் தானாக வெடித்துக்
கிளம்புவது ...

அறிவு கடந்த காலத்தில் இருந்து வருவது ...
அது சாத்திரங்களில் இருந்து பெற்றுக் கொள்வது ..

ஆனால் ஞானம் தன்னுடையது ..தன்னுடைய
பிரக்ஞையைப் படித்துப் பார்த்து தெரிந்து கொள்வது ....

ஞானம் ஒரு அனுபவம் ...அது இருத்தலின் ஓர்
அனுபவம் ...

அதில் நீ கடவுளை உணர்ந்து விடுகிறாய் ...
நித்தியத்தை ருசித்து விடுகிறாய் ...

வடிவங்கள் மாறி மாறி வந்தாலும் அகத்தின் பிரக்ஞை மாறாமல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வாய் ...

எல்லா சாத்திரங்களும் அந்தப் பிரக்ஞையில்
அடங்கி விடுகின்றன ...

அறிந்து கொள்ளாமல் இருந்தால்தான் வெகுளியாக இருக்க முடியும் ..

வெகுளித் தனமான நெஞ்சமே ஞானம் பெற
முடியும் ...

  ஓஷாே
தம்ம பதம்

Comments

  1. அறிவு - is wrongly understood//translated to knowledge.
    அறிவு - is Intelligence, it is expression of athma.

    ReplyDelete

Post a Comment