Google

ஒரு பெரிய குருதேவரை அனுகுகிறீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? - OSHO



ஒரு பெரிய குருதேவரை அனுகுகிறீர்கள். அவர் புத்தராக இருக்கலாம்.ஏசுநாதராக அல்லது ஷுவாங் ட்சூவாக இருக்கலாம். நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

சூரியனைப் பார்த்து என்ன செய்வீர்களோ அதைச் செய்தால் போதும்.

அவரைப் பின்பற்ற வேண்டாம்.

பின்பற்றாமல் இருக்கவும் வேண்டாம்.

அவரை உள்வாங்கிக் கொள்ளுங்கள் அதுவே போதும்.

அதற்குப் பொருள் என்ன? என்னை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.நான் சொல்வதை ஜிரணித்துப் பின் உங்கள் வழியில் செல்லுங்கள்.

நான் செய்வதைப் போல் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் உங்கள் உள்ளொளியை இழந்து விடுவீர்கள்.

நாம் யாரும் ஒரே மாதிரியாக இல்லை. நமது பாதைகளும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை.இந்தப் புரிதல் உங்கள் மனதில் ஆழமாக இறங்கட்டும்.

ஒரே போல் இருக்கும் இரண்டு மனிதர்கள் இல்லை.இருக்கவும் முடியாது. செய்ததையே செய்யும் பிழை படைப்பில் இல்லை.

எத்தனை வேறுபட்ட மனிதர்கள் வந்துவிட்டாலும் இன்னும் படைப்பு சலிக்காமல் புதுப்புது ரகங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

தனித்தன்மையில்தான் இருப்பு நிலை மலர்கிறது. ஒவ்வொருவரும் விசேஷமானவரே. ஒவ்வொருவரும் சிறப்பானவரே.சாதாரணம் என்று எதுவுமே படைப்பில் கிடையாது.

இதை நிரூபிக்கத் தேவையில்லை.

--ஓஷோ--
-OSHO_Tamil

Comments