Google

ஓர் சக்தி தூண் தியானம் - OSHO



ஓர் சக்தி தூண் தியானம்

நீங்கள் வெறுமனே நின்று கொண்டிருந்தால் ஒரு வித அமைதித்தன்மை திடீரென்று உங்களை வந்து அடையும் .உங்கள் அறையின் ஒரு மூலையில் எதுவுமே செய்யமால் அமைதியாக நின்று கொண்டிருங்கள்.திடீரென்று உங்கள்  சக்தியும் நிலைபெற்று நிற்கும்.அது சமயம் நீங்கள் வெறுமனே உட்கார்ந்திருந்தல் பல வித எண்ணங்கள் உங்கள் மனதை வந்து தாக்கும்.

ஏனென்றால் சிந்திப்பவன் எப்பொழுதும் உட்கார்ந்தே சிந்திப்பான் ஆனால் நிற்கும்பொழுது உங்கள் உள் சக்தி ஒரு தூண் மேலும் கீழும் செல்வது போல் உங்கள் உடல் பூரா சமமாகப் பரவி விடுகிறது.நிற்பது ஒரு அழகு தான்.
உங்களில் சிலருக்கு இது மிகவும் அழகாகத் தோன்றலாம்.ஆகவே முயற்சி செய்து பாருங்கள்.சுமார் ஒரு மணி நேரம்  இப்படி அமைதியாக நிற்க முடிந்தால் மிக அழகாக இருக்கும்.அப்பொழுது நீங்கள் மனத்தாலும் உடலாலும் எந்த சலனமும் இன்றி இருக்க வேண்டும்.

 அப்படி இருந்தால் உங்கள் உள்ளே ஏதோ ஒன்று அமைதியாக தங்குவதை உணர்வீர்கள். நீங்களே உங்களை சக்தியால் ஆக்கப்பட்ட ஓர் தூண் போல உணர ஆரம்பிப்பீர்கள். இந்த உடல் மறைந்து விடும்.

-OSHO_Tamil

Comments