Google

தேனிலவு முடிந்துவிட்டது என்று நீங்கள் கூறுவதன் அர்த்தம் என்ன ? - OSHO



தேனிலவு முடிந்துவிட்டது என்று நீங்கள் கூறுவதன் அர்த்தம் என்ன ?

‪#‎பதில்‬ : - " தேனிலவு முடிந்துவிட்டது என்றால் உங்களுடைய காதல் கற்பனை முடிந்துவிட்டது என்று அர்த்தம் ! பெண் இன்பம் என்பதே ஒரு உணர்ச்சிகரமான கற்பனைதான் . நீங்கள் ஒரு பெண்ணை முத்தம் இடுகிறீர்கள் . இதனால் நீங்கள் அடையும் உடல் இன்பம் என்ன ? நீங்கள் ஒரு பெண்ணின் மார்பில் முத்தம் இடுகிறீர்கள் . இதனால் நீங்கள் அடையும் இன்பம் என்ன ? ஒன்றுமில்லை ! யோசித்துப் பாருங்கள் . ஆனால் , நீங்கள் அணைப்பதால் , முத்தம் கொடுப்பதால் , அவள் கிளர்ச்சி அடைகிறாள் - ஏன் ?

பெண்களுக்கு பாலியல் உணர்வுக் கேந்திரம் உடலின் பல இடங்களில் பரவிக் கிடக்கிறது . உதாரணமாக உதடு , கழுத்து , மார்பு , தொப்புள் ....
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் . ஒரு பெண் , ஆணால் அணைக்கப்பட்டு இந்த இடங்களில் எல்லாம் முதலில் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் . ஆனால் ஆணின் உணர்வு மையம் , அவனுடைய குறியில் மாத்திரம் , அதுவும் அதன் நுனியில்தான் இருக்கிறது . அவன் உடலில் மற்ற இடங்களில் எதுவும் கிடையாது ! அது மரக்கட்டைதான் ! ஒரு பெண் , ஆணைக் கட்டித்தழுவி , அவனுடைய உடலில் பல இடங்களில் முத்தம் கொடுத்தால் , அவன் ஓரளவு கிளர்ச்சி அடைவான் . அல்லது கிளர்ச்சி ஏதும் அடைய மாட்டான் . இது அவனுடைய மனநிலையையும் , விந்து நிறைவையும் பொறுத்தது .

ஒரு பெண்ணின் உடலில் பாலியல் உணர்வுக் கேந்திரம் கீழ்காணும் இடங்களில் கீழ்க்காணும் விகிதத்தில் இருக்கலாம் . இது ஒரு தோராயம்தான் . இதைத்தவிர வேறுபல இடங்களிலும் அது இருக்கலாம் . பொதுவாக , முகம் , உதடு 10 சதவிகிதம் ; கழுத்து 8 சதவிகிதம் ; அக்குள் 10 சதவிகிதம் ; தொப்புள் , இடுப்பு 10 சதவிகிதம் ; அடித்தொடை 10 சதவிகிதம் ; பெண்குறி 30 சதவிகிதம் ; மார்பு 15 சதவிகிதம் ; மீதி இடங்கள் 7 சதவிகிதம் . இது பெண்ணுக்குப் பெண் மாறுபடும் .

இதை ஒரு ஆண் சரியாகப் புரிந்துகொண்டு , தன் முன்விளையாட்டை இவற்றில் 10 - லிருந்து 15 நிமிடங்கள் ஈடுபடுத்தினால் , ஒரு பெண் உடலுறவுக்கு முன்பு பாதி சொர்க்தை அடைந்துவிடுவாள் ! ஆனால் , பெரும்பான்மையான ஆண்களால் இவ்வளவு நேரம் ஈடுபட முடியாது . அதுதான் பரிதாபம் ! ஏனெனில் அதற்குள் விந்து முந்திக்கொண்டு வெளியே வரத்துடிக்கும் ! காரணம் சிறுவயதில் ஈடுபட்ட சுய இன்பம் ! ஆகவேதான் , தாம்பத்தியத்தில் பெரும்பான்மையான பெண்கள் திருப்தியற்றே இருக்கிறார்கள் . இதனால் குடும்பத்தில் சச்சரவு , போர்தான் - சண்டை அல்ல ! பெண்ணை உடலுறவில் திருப்தி செய்ய இருவரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் .

ஆரம்பத்தில் ஆண் அந்த இன்ப உணர்வில் மனதை முழுமையாகப் பதிக்கவேண்டும் . ஆனால் , இது விந்துவை மிக விரைவாக வெளியேற்றத்தான் செய்யும் . இதைப் பெண் ஒருக்காலும் விரும்பமாட்டாள் . அவளிடம் உங்கள் நிலையை வெளிப்படையாக எடுத்துச் சொல்லி மெல்ல , மெல்ல நேரத்தை அதிகமாக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உங்களிடமும் அவளிடமும் ஊட்டவேண்டும் . உங்களுடைய தன்னம்பிக்கை மிகமிக முக்கியம் . இந்த நேரத்தைப் படிப்படியாக உயர்த்த முயலுங்கள் . மனம் அதில் ஈடுபட ஈடுபட அது தன் கவர்ச்சியை மெல்ல மெல்ல இழக்கும் . இதை நீங்கள் புரிந்துகொண்டு , மெல்ல மெல்ல நேரத்தை அதிகப்படுத்துங்கள் . முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை . இருவருக்கும் சேர்ந்தே உச்ச இன்பம் கிடைக்க முயற்சி செய்யுங்கள் . இதுதான் பேரின்பம் .

ஆகவே தேனிலவு என்பதும் ஒருவித கற்பனை மயக்கம்தான் . அது உங்களுடைய மனதின் வெளிப்பாடு . மனக்கற்பனை . எந்த அளவுக்குத் தேனிலவு எதிர்பார்ப்புடன் இருக்கிறதோ , அந்த அளவுக்கு அதில் ஏமாற்றமும் இருக்கும் . அதனால்தான் பெரும்பான்மையான காதல் திருமணங்கள் வெற்றியடைவது இல்லை . இதற்குப் பெற்றோர்கள் பார்த்துச் செய்யும் திருமணத்தில் அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை . ஆகவே ஏமாற்றமும் குறைவு .

காதல் திருமணங்கள் வெற்றியடைய முடியாது . அதனுடைய தோல்வி , அதிலேயே அடங்கி இருக்கிறது ! அது ஒரு மிகப்பெரிய கற்பனை மயக்கம் . அதனால் உண்மையை ஒருக்காலும் வெற்றி கொள்ள முடியாது . அந்தக் கற்பனை மயக்கத்திலேயே எப்பொழுதும் நீங்கள் இருக்க ஒரே வழி , நீங்கள் எப்பொழுதும் அந்தத் தேனிலவு கற்பனையிலேயே இருக்கவேண்டும் . அதற்கு நீங்கள் உங்கள் காதலியை அல்லது காதலனை நேரில் சந்திக்கக் கூடாது ! அப்பொழுதுதான் அது சாத்தியம் . முடியுமா ?

ஆகவே , நேரில் சந்தித்து உறவு கொள்ளும்பொழுது , உண்மையை நேருக்கு நேராகச் சந்திக்கும்பொழுது , அவர்களுடைய தேனிலவு முடிந்துவிடுகிறது . இது பெரும்பாலும் திருமணத்தில் முடிவடைந்துவிடுகிறது ! ஆக , திருமணமே காதலை அழிப்பது ! ' ..........
- Osho_Tamil                  

Comments