நமது சக்தி பாயும், நமது வெளிச்சம் வீசும் -OSHO
நமது சக்தி பாயும், நமது வெளிச்சம் வீசும் இந்தப் பொருள் உலகத்தை விஞ்ஞானம் பார்க்கிறது! ஆன்மீகம் நமது சக்தி பாயாத, ஆனால் பாயக்கூடிய விஷயங்களைத் தேடுகிறது! அதனால் விஞ்ஞானம், ஆன்மீகத்தைவிட எளிதாகத் தெரிகிறது. ஆன்மீகம், ஒரு உயர்ந்த விஞ்ஞானம்; எப்படி அது விஞ்ஞானத்தைவிட எளிதாக இருக்க முடியும்? ஆன்மீகம் ஓர் உயரநிலை விஞ்ஞானம். இயற்கை பரிணாம வளர்ச்சி மனிதனுடன் நின்று விட்டது! இதுதான் நிதர்சனம். இப்போது விஞ்ஞானிகள்கூட கொஞ்சம் கொஞ்சமாக இதைப்பற்றி விழிப்படைந்து வருகின்றனர்.
ஆயிரக் கணக்கான வருடங்களாக மனிதனுக்கு எதுவும் நிகழவில்லை; அவன் அது போலவே இருந்து வருகிறான் _ இயற்கை தனது வேலையை முடித்துக் கொண்டது போலத் தோன்றுகிறது! இப்போது மனிதன் மேலும் வளர்வதற்கான முயற்சியை அவனேதான் மேற்கொள்ள வேண்டும்! அதுதான் ஆன்மீகம் என்பதாகும்.ஆன்மீகம் என்பது அறிவதற்கான ஒரு கேள்வியல்ல, அது வாழப்பட வேண்டிய ஒன்று. ஆன்மீகம் என்பது வாழ்க்கை; நீ அதை வாழ்ந்தால் தவிர, அது என்ன என்று எதுவும் உனக்குத் தெரியாது...
--ஓஷோ--
-OSHO_Tamil
Comments
Post a Comment