Google

அடையாளங்களிலிருந்து விலகிவிடு - OSHO




❤ அடையாளங்களிலிருந்து விலகிவிடு
ஆணவம் ஒரு செயலுடன், ஒரு குணநலனுடன், தன்னை அடையாள படுத்திக் கொள்கிறது.
ஒருவர் கிளார்க், ஒருவர் போலீஸ் ,ஒருவர் கமிஷ்னர், ஒருவர் தோட்டக்காரர், ஒருவர் கவர்னர் ,ஒருவர் மேனேஜர் , ஒருவர் டாக்டர் , என இருந்தால்
அவை யாவும் செயல்கள்.
நீங்கள் செய்பவை அவை நீங்கள் அல்ல
.
நீ உன்னை அடையாளபடுத்திக் கொள்ளும் அளவு
நீ உயிரற்று போய் விடுகிறாய்.
இது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
நீ செய்வது எதனுடனும் உனக்கு சம்பந்தமில்லை.
உனது இருப்பிற்கும் உனது வேலைக்கும் தொடர்பில்லை.
நீ செய்யும் வேலை எதுவாக இருப்பினும் அது உனது இருப்பை தொடாது.
உன் மனைவியுடன் இல்லாத போது நீ கணவனல்ல.
மனைவி இல்லாதபோது நீ எப்படி கணவனாக இருக்க முடியும். இது மடத்தனம்.
உன் குழந்தையுடன் நீ இல்லாதபோது எப்படி நீ ஒரு தாயாகவோ தந்தை யாகவோ இருக்க முடியும் அது இயலாது.
நீ கவிதை எழுதாத போது நீ கவிஞனல்ல.
நடனமாடாதபோது நீ டான்ஸர் அல்ல.
நீ நடனமாடும்போதுதான் நீ டான்ஸர்.
அந்த நேரத்தில் உனது உடலின் நிலை, நாடித்துடிப்பு நடனமாடுவதற்கு ஏற்றாற் போல ஒரு குறிப்பிட்ட விதமாக இருக்கும்.
ஆனால் அது அந்த நேரத்திற்கானது மட்டுமே.
நிறுத்தியவுடன் டான்ஸர் மறைந்து விடுவார்.
நீ அதிலிருந்து வெளியே வந்து விடுவாய்.
இது போன்று இருந்தால் நீ சுதந்திரமாக இருக்க முடியும்.
சுமையின்றி இருக்க முடியும்,
பொங்கி பெருகி வழிந்தோடலாம்.
நீ ஆபிஸில் இருக்கும்போது ஒரு கிளார்க்காகவோ, ஒரு கமிஷ்னராகவோ, ஒரு கவர்னராகவோ இரு.
அது மிகவும் சரியானது.
ஆனால் நீ ஆபிஸை விட்டு வெளியே வந்தவுடன் கிளார்க்காகவோ, கமிஷ்னராகவோ, கவர்னராகவோ, இருக்காதே.
அந்த வேலை முடிந்தது.
எதற்கு அதை சுமக்கிறாய்.
ஒரு கவர்னர் போல தெருவில் நடக்காதே.
நீ அதல்ல.
அந்த கவர்னர்தனம் உன் தலைமேல் ஒரு பாரமாக உட்கார்ந்து இருக்கும் .
அது உன்னை சந்தோஷமாக இருக்க விடாது.
மரத்தின் மீதுள்ள பறவைகள் பாடிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் ஒரு கவர்னரால் எப்படி கூட பாட முடியும்
ஒரு கவர்னரால் எப்படி பறவைகள் பாட்டுக்கு ஆட முடியும்
மழை வருகிறது. மயில் ஆடுகிறது எப்படி ஒரு கவர்னரால் கூட்டத்தில் நின்று அதை ரசிக்க முடியும்.
முடியவே முடியாது.
ஒரு கவர்னர் ஒரு கவர்னராகத்தான் இருக்க முடியும்.
அவர் வழியில் போய்கொண்டே இருப்பார்.
அங்கு மிங்கும் பார்க்கவே மாட்டார்.
மரங்களின் பசுமையை, நிலாவை ரசிக்க மாட்டார்.
அவர் ஒரு கவர்னராகவே இருப்பார்.
இந்த அடையாளப்படுத்திக் கொள்ளுதல் உன்னை கொன்று விடுகின்றன
அடையாளத்தில் இருந்து வெளியே வா  ❤

❤ ஓஷோ ❤
-OSHO_Tamil

Comments