Google

அசுரனை வீழ்த்திய புத்தர் - ஓஷோ.



அசுரனைவீழ்த்தியபுத்தர்_ஓஷோ.

அங்குலிமாலன் ஆயிரம் பேரை கொல்வதாக சபதம் மேற்கொண்டிருந்தான்.அந்த அரக்கன் எந்த வழியாக வந்தாலும் மக்கள் எல்லோரும் அலரியடித்து ஓடினர்.அரசன் பிரசேனிஜித் தன் படைகள் முழுவதையும் அனுப்பி அவனை அழிக்கப்பார்த்தார்.அது முடியாமல் போனது.அங்குலிமாலன் 999 பேரை கொன்று அவர்களை விரல்களை வெட்டி மாலையாக கழுத்தில் அணிந்திருந்தான்.ஒரே ஒருவனுக்காக அவன் காத்திருந்தான்.

புத்தர் பாதயாத்திரையாக அந்த வழியாக வந்துக்கொண்டிருந்தார்.அங்கிருந்த மக்கள் புத்தரை எச்சரித்தனர்.''இந்த வழியாக சென்றால் அந்த அரக்கன் உங்களை கொன்றுவிடுவான்.தயவு செய்து வேறு வழியாக செல்லுங்கள்'' என சொன்னார்கள்.புத்தர் சொன்னார்''யாருக்காகவும் நான் என் வழியை மாற்றிக்கொள்ளமாட்டேன்.என்னை கொல்வதால் மற்றொருவர் உயிர் காக்கப்படுமென்றால் நான் சாகவும் தயார்''.என்றும்.''என்னை மகிழ்ச்சிக்கடலில் அங்குலிமாலன் ஆழ்த்திவிட்டான்.இன்று அவன் வெல்கிறானா? நான் வெல்கிறேனா? என்பது தெரிந்துவிடும் '' என அந்த வழியாக தன்பயணத்தை தொடர்ந்தார்.

அங்குலிமாலன் எச்சரித்தான்'' உன்னை பார்த்தால் சாது மாதிரி தெரிகிறது...உன்னைவிட்டுவிடுகிறேன் சென்றுவிடு'' என்றான்.அதற்கு புத்தர்'' என் உடலை தானே கொல்ல விருப்பம் கொள்கிறாய் ..தாராளமாக என்னை கொல்லலாம்'' என எதிரே வந்து நின்றார்.கோடாரியை எடுத்து மீண்டும் எச்சரித்தான்.ஆனால் புத்தர் ''என்னை கொல்வதற்கு முன்பாக நீ ஒரு சிறிய காரியம் ஒன்றை செய்யவேண்டும்'' என்றார்.'' என்ன செய்யவேண்டும்'' என கொக்கரித்தான் அங்குலிமாலன்.'' நீ அந்த மரத்திலுள்ள இலைகளை பரிக்கவேண்டும் '' என்றார்.கோடாரியை வீசினான் அங்குலிமாலன் இலைகள் மளமளவென அவன் மேல் கொட்டின.''இந்தா எடுத்துக்கொள்'' என்றான்.புத்தர் சொன்னார்'' நீ இதை மறுபடியும் மரத்தில் ஒட்டவேண்டும்'' என்றார்.'' அதெல்லாம் முடியாது.வெட்டுவது மட்டும் தான் எனக்கு தெரியும் '' என்றான் அங்குலிமாலன்.

புத்தர்  '' இந்த காரியத்தை ஒரு குழந்தைகூட செய்துவிடும்.ஒரு உயிரை ஒரு சிறுவன் கூட தன் ஆயுதத்தால் எடுத்துவிடுவான்.இதெல்லாம் ஒரு வீரமா?அழிப்பவன் வீரனல்ல ..உருவாக்குபவன் தான் வீரன்'' என்றார்.அங்குலிமாலன் குழம்பிப்போனான்.'' அங்குலிமாலா குழம்பாதே ..அன்பால் இங்கே அனைவரையும் உன்னோடு ஒட்டவைக்கிறேன் வா..'' என்று புத்தர் அவனை தன்னோடு அழைத்தார்.

புத்தரின் சிஷ்யனாக மாறிய அங்குலிமாலன் பிச்சையெடுக்க சென்றான்.ஊர் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே சென்றுவிட்டனர்.கற்களால் அவனை தாக்கினர்.அவன் உடல் முழுதும் ரத்தம் கொட்டி கீழே சாய்ந்தான்.அங்கே புத்தர் வந்தார்.அங்குலிமாலன் முகத்தில் அப்போதும் அன்புவெள்ளத்தை  கண்டார்.'' அங்குலிமாலா நீ இப்போது சுத்த வீரனாக மாறிவிட்டாய்..என்னோடு வா'' என பிச்சையெடுக்க தன்னோடு அழைத்து சென்றார்.எதிரே வந்த அரசர் அங்குலிமாலனை கண்டவுடன் அவர் கால்கள் நடுங்கின.அங்குலிமாலன் அரசனிடம் சொன்னான்'' அரசே அந்த அரக்கன் எப்போதோ மறைந்துவிட்டான்.புத்தர் அவனை கொன்றுவிட்டார்.இப்போதிருப்பது ஒரு சாது'' என்றான்.

Comments