Google

பாலியலும் அதன் தொடர்பானதும் - OSHO



ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்”.
அத்தியாயம் – 7- பாலியலும் அதன் தொடர்பானதும்
 பகுதி-9 எதிர்மறையை வெளியேற்றுங்கள்.
 .

காதல் என்பது ஆரம்பத்தில் மிகவும் அழகானது, காரணம் நீங்கள் உங்களின் அழிக்கும்சக்தியை அதில் கொண்டு வரவில்லை. ஆரம்பத்தில் நீங்கள் உங்களின் ஆக்கபூர்வமான சக்தியை அதில் கொண்டுவருகிறீர்கள் – இரண்டுபேரும் தங்களின் ஆக்கப்பூர்வமான சக்தியை அதில் கொண்டு வருகிறார்கள். அப்போது விஷயங்கள் அற்புதமாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், போகப்போக அந்த எதிர்மறை சக்திகள் வர ஆரம்பிக்கும். நீங்கள் அதை எப்போதும் பின்னே பிடித்து வைத்துக்கொண்டிருக்க முடியாது. ஒருமுறை உங்கள் ஆக்கபூர்வ சக்தி முடிந்துவிட்டால், -- அது மிகவும் சிறியது, எதிர்மறை பெரியது. ஆக்கபூர்வம் என்பது சிறிய அளவு, அதனால் சிலநாட்களுக்குள் தேனிலவு முடிந்துவிடும், பிறகு எதிர்மறை வரும். நரகம் தனது கதவைத் திறக்கும், என்ன நடக்கிறது என்பதை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது. அப்படி ஒரு அற்புதமான உறவு – ஏன் இப்படி குட்டிச்சுவரானது? என்ற கேள்வியே வரும்.
 .
ஒருவர் ஆரம்பத்திலிருந்து எச்சரிக்கையாக இருந்தால், அதை காப்பாற்றலாம். அதனால், உங்கள் ஆக்கபூர்வ சக்தியை அதில் செலுத்துங்கள், ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கூடிய விரைவில் அந்த எதிர்மறைசக்தி உள்ளே வரத் துவங்கும். அந்த எதிர்மறை உள்ளே வரத்துவங்கும் போது, நீங்கள் அந்த எதிர்மறையை தனிமையில் வெளியேற்றவேண்டும்.
 .
அறைக்குள் செல்லுங்கள், அந்த எதிர்மறையை வெளியேற்றுங்கள்; அதை இன்னொருவர் மீது எறியவேண்டிய அவசியமேயில்லை.
 .
உங்களுக்கு அலற வேண்டும், கோபப்பட வேண்டும், கத்த வேண்டும் என்று தோன்றினால், ஒரு அறைக்குள் செல்லுங்கள், கத்துங்கள், கோபப்படுங்கள், ஒரு தலையணையை உதையுங்கள். அடுத்தவர் மீது யாரும் அப்படி ஒரு மூர்க்கத்தனத்தில் இருக்கமாட்டார்கள். அவர்கள் உங்களுக்கு எந்த கேடும் செய்யவில்லை. அதனால் நீங்கள் எதற்காக எதையோ அவர்கள் மீது எறிய வேண்டும். அதனால் எல்லா எதிர்மறைகளையும் குப்பைத் தொட்டியில் தூக்கிப்போடுவது நல்லது.
 .
நீங்கள் எச்சரிக்கையாக இருந்து பார்த்தால், அதை செய்யமுடியும் என்பதை கண்டு நீங்களே வியந்து போவீர்கள். ஒருமுறை அந்த எதிர்மறை வெளியேறி விட்டால், பின் மறுபடியும் ஆக்கபூர்வமானது பொங்கி வழியும்.
 .
எதிர்மறை என்பது ஒரு உறவில் மிகத்தாமதமாகத்தான் – அதுவும் அந்த உறவு என்பது நன்றாக வேரூன்றிய பிறகுதான் வெளிப்பட வேண்டும். அதுவும் கூட, அதை ஒரு சிகிச்சை அளவில்தான் இருக்கவேண்டும். ஒரு உறவிலுள்ள இருவர், மிகமிக எச்சரிக்கையாக இருந்து, மிகவும் ஆக்கபூர்வ சிந்தனை உள்ளவர்களாக, அவர்கள் இருவரும் ஒருவராக இணைந்தபிறகு, அடுத்தவரின் எதிர்மறையை சகித்துக்கொள்ள முடிகிறபோது – சகித்துக்கொளவது மட்டுமல்ல ஆனால் அதை பயன்படுத்தவும் முடியும் – அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வரவேண்டும். இப்போதிலிருந்து தாங்கள் இருவரும் எதிர்மறையின் போதும் ஒன்றாக இருப்போம் என்று முடிவெடுக்க வேண்டும், ஆனால் அதுவும் சிகிச்சை போலத்தான்.
 .
அப்போதும்கூட, என்னுடைய யோசனை என்பது, அது தெரிந்தே நடக்கட்டும், தன்னுணர்வற்ற நிலையிலல்ல. அதை வேண்டுமென்றே செய்யுங்கள். எப்போதும், எந்த நேரமும் எதிர்மறையாக இருப்பதைவிட ஒவ்வொரு இரவும் ஒருமணிநேரம் ஒருவருக்கொருவர் எதிர்ப்பாகவே இருப்போம் என்பதை ஒரு விஷயமாக்குங்கள். – அது ஒரு விளையாட்டாக இருக்கட்டும். –,மக்கள் சாதாரணமாகவே எச்சரிக்கையாக இருப்பதில்லை – இருபத்திநாலு மணிநேரமும் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதில்லை – ஆனால் ஒருமணிநேரம் நீங்கள் ஒன்றாக இருந்து எதிராக இருக்கலாம். பிறகு அது ஒரு விளையாட்டாகும், அது சிகிச்சை பயிற்சியாக இருக்கும். ஒருமணிநேரத்திற்கு பிறகு நீங்கள் அதை முடித்துவிடுங்கள். அங்கே மிச்சம் மீதி ஏதும் இருக்காது, அதை உங்கள் உறவில் கொண்டு வருவதில்லை.
 .
முதல் படி: எதிர்மறை என்பது தனியாக வெளியேற்றப்படவேண்டும். இரண்டாவது படி: ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருவரும் எதிர்மறையை வெளிப்படுத்த போகிறோம் என்கிற ஒப்பந்தம் செய்து கொண்டு அதன்படி எதிர்மறையை அந்த நேரத்தில் வெளியேற்ற வேண்டும். மூன்றாவதுநிலையில்தான் ஒருவர் இயற்கையாக இருக்கலாம். அங்கே பயப்படத் தேவையில்லை. பிறகு நீங்கள் எதிர்மறையாகவும், இருக்கலாம், ஆக்கபூர்வமாகவும் இருக்கலாம். இரண்டுமே அழகானதுதான் – ஆனால் அது மூன்றாவதுநிலையில்தான்.
 .
முதல்நிலையில் இனியும் கோபம் வருவதில்லை என்பதை நீங்கள் உணரத்துவங்கினால், பின் முதல் நிலை முடிந்தது. நீங்கள் ஒரு தலையணைக்கு முன்பு அமர்ந்திருக்கிறீர்கள், கோபம் வரவில்லை – அப்போது முதல்நிலை முடிந்துவிட்டது. கோபம் பல மாதங்களுக்கு வரும், ஆனால் ஒருநாள் அது பொங்கவில்லை என்பதை காண்பீர்கள், அது அர்த்தமற்றதாகிவிட்டது, இனியும் உங்களால் தனியாக கோபப்படமுடியாது. ஆனால் அடுத்தவருக்காக காத்திருங்கள், அவருக்கும் முதல்நிலை முடியும் வரை காத்திருங்கள். அவருடையதும் முடிந்துவிட்டால், பிறகு இரண்டாம்நிலை துவங்குகிறது. பிறகு ஒன்று அல்லது இரண்டுமணிநேரம் – காலையோ மாலையோ, நீங்களே முடிவுசெய்யலாம் – நீங்கள் எதிர்மறையாகுங்கள், வேண்டுமென்றே, அது மனோநாடகம், அது தனிப்பட்டதல்ல.
 .
நீங்கள் வேகமாக அடிக்காதீர்கள் – அடியுங்கள். அந்த நபரை அடிக்காதீர்கள். உண்மையில் நீங்கள் உங்களுடைய எதிர்மறைத்தனத்தை தூக்கி எறிகிறீர்கள். நீங்கள் அடுத்தவரை குற்றம் சாட்டவில்லை.` நீ ரொம்ப கெட்டவள்’’ என்று சொல்லாதீர்கள், `நீ மோசமாக இருப்பதாக நினைக்கிறேன்’ என்று சாதாரணமாகச் சொல்லுங்கள். `நீ என்னை அவமானப்படுத்தினாய் ‘’, என்று சொல்லாதீர்கள் `நீ அவமானப்படுத்தியதாக உணர்கிறேன்’’. இது முற்றிலும் வித்தியாசமானது. அது ஒரு வேண்டுமென்றே செய்யும் விளையாட்டு. ``நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன், அதனால் நான் என் கோபத்தை வெளியே எறிகிறேன். நீதான் எனக்கு நெருக்கமானவர், ஆகவே இதை வெளியேற்ற ஒரு காரணமாக நீ இரு’’ என்று சொல்லுங்கள்…. மற்றவரும் அதையே செய்கிறார்.
 .
ஒரு தருணம் வரும், மறுபடியும் நீங்கள் இந்த வேண்டுமென்றே செய்யும் எதிர்மறை செயல்படாததை காண்பீர்கள். நீங்கள் ஒருமணிநேரம் அமருங்கள்; எதுவும் உங்களுக்கு வருவதில்லை; உங்கள் சகாவிற்கும் வருவதில்லை. பிறகு இந்த இரண்டாம்நிலையும் முடிந்தது. இப்போது மூன்றாவதுநிலை - மூன்றாவதுநிலைதான் முழுவாழ்க்கை. இப்போது நீங்கள் எதிர்மறையாகவும், ஆக்கபூர்வமாகவும் இருக்கத்தயார். நீங்கள் தன்னியல்பாக இருப்பீர்கள்.
 .
இப்படித்தான் காதல், திருமணமாகிறது.
 .
-தொடரும்.

Comments