தலையால் எதையும் செய்யாமல் இருக்க முயற்சி செய் - OSHO
❤ தலையால் எதையும் செய்யாமல் இருக்க முயற்சி செய்
குருடான மனிதர்கள் அதிக கூர்மையான,
அதிக நுட்பமான காதுகளைப் பெற்றிருப்பர்.
அவர்கள் ஆழமான தொடு உணர்ச்சியை கொண்டிருப்பார்கள்
ஒரு மையம் இல்லை யென்றால் சக்தி மற்றொரு மையம் மூலம் பாயும்
உனது தலை மறைந்து விட்டதாக நீ உணர்கையில்.....
உனது மையம் இதயத்தில் விழும்.
அப்போது இந்த உலகத்தை தலையின் மூலமாக அல்லாமல் இதயத்தின்
மூலமாக பார்க்க தொடங்குவாய்.
இதயத்தின் மூலம் பார்க்க முடியும் போது
இந்த முழு அண்டமும் ஒருங்கிணைந்து தெரியும்.
மனதின் மூலமாக அணுகும்போது
முழு உலகமும் தனித்தனி அணுக்களாக தெரியும்.
எதையும் அன்போடு பார்.
பொருள்களிடம் கூட அன்போடு இரு.
நீ ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் போது நாற்காலியை
அன்போடு உணரு.
நன்றியுணர்வு கொள்.
தொடுவதை உணரு
அதை நேசி.
உணவு உட்கொள்ளும் போது அன்போடு உணவை அருந்து.
எதையும் அன்போடு செய்யும் போது உனது இதய மையம் இயங்க ஆரம்பிக்கும்.
இசையை ரசிப்பதற்கு மனம் தேவை இல்லை
அழகை குறித்தும் இசையை குறித்தும்
ரசிப்பதற்கு உனக்கு நுட்பமான உணர்வு தான் தேவை.
மனம் தேவையில்லை
அதிக நுட்ப உணர்வோடு உயிர்த் துடிப்போடு இருக்க முயற்சி செய்.
குழந்தைகளுடன் விளையாடு
சில சமயங்களில் உனது பெயர் உனது கௌரவம் உனது படிப்பு இவைகளை மறந்து விடு.
இறுக்கமாக இருக்காதே
வாழ்வை வேடிக்கையாக எடுத்துக் கொள்
அப்போது உன்னுடைய இதயம் வளரும் சக்தி பெறும்.
உயிர்த் துடிப்புள்ள இதயத்தோடு நீ இருக்கும் போது
மனம் உனக்கு ஒரு கருவியாகி விடும்.
அப்போது இதயம் உனக்கு நீ ஒரு
எஜமானன் என்ற உணர்வைக் கொடுக்கும் ❤
❣ ஓஷோ
தந்த்ரா ரகசியங்கள் ❣
OSHO_Tantra_Tamil
Comments
Post a Comment