ஓஷோ ஜோக்ஸ் - ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள்.
ஓஷோ ஜோக்ஸ்
*******
ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள்.
அவளது ஈம சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சி போல நடந்து கொண்டிருந்தது.
நகரிலுள்ள பெரிய மனிதர்களும் மற்றவர்களும் வந்து துக்கம் கொண்டாடினர்.
அவர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விட கவலை கொண்டவனாக காணப்பட்டான்.
சடங்குகள் முடியுமுன் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.
மனைவியை இழந்தவர் கேட்டார்.
தேம்பி தேம்பி அழும் அந்த புதியவன் யார்?
பக்கத்தில் நின்ற ஒருவர் சொன்னார்:
தெரியாதா உங்களுக்கு?இறந்து போன உங்கள் மனைவியின் காதலன் அவன்.
மனைவியை இழந்தவர் அவனிடம் சென்றார்.
அவனது தோள்களை தட்டி கொடுத்தார்.
பிறகு கூறினார்.
உற்சாகமாக இரு.ஒருவேளை நான் மறுமணம் செய்து கொள்ள கூடும்
😜
-OSHO
Comments
Post a Comment