Google

நீ படைக்கப்பட்ட ஒருவன் என்கிற கருத்தானது உன்னை ஒரு பொருள் போன்று ஆக்கி விடுகிறது. - OSHO



நீ படைக்கப்பட்ட ஒருவன் என்கிற கருத்தானது உன்னை ஒரு பொருள் போன்று ஆக்கி விடுகிறது.

அது உன் உயிர் உணர்வை வெளியே எடுத்து விடுகிறது.

கடவுள் என்பவர் இல்லாத போது மட்டுமே நீ ஒரு உயிர் உணர்வாக இருக்க முடியும்.

கடவுளும், ஒரு உயிர் உணர்வாக நீயும் ஒன்று சேர்ந்து ஒன்றாக இருக்க முடியாது.

அதனால்தான் கடவுள் இல்லை என்று நான் நிச்சயமாக கூறுகிறேன்.

ஏனெனில் நான் எங்கு பார்த்தாலும் உயிர் உணர்வினைக் காண்கிறேன்.

இந்த உயிர்களின் இருப்பு நிலையே, கடவுள் இல்லை, கடவுள் இருக்கவும் முடியாது என்பதற்கான போதுமான நிரூபணமாக இருக்கிறது.

ஒன்று நீ இருக்க முடியும் அல்லது கடவுள் இருக்க முடியும்;நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்க முடியாது.

கடவுளை நம்புகின்ற ஒரு மனிதன், அவனை அறியாமலேயே தனது உயிர் நிலையை இழந்து கொண்டு இருக்கிறான்.

--ஓஷோ--
-OSHO_Tamil

Comments