Google

இந்த முழு பிரபஞ்ச பேரியக்க உயிர்த்தன்மை ஒரு புரியாத புதிர், - OSHO



🌎 இந்த முழு பிரபஞ்ச பேரியக்க உயிர்த்தன்மை ஒரு புரியாத புதிர்,

மற்றும் அறிவுக்கு எட்டாதது.

கண்ணற்றவனுக்குத்தான் இந்த உலகத்தின் அதிசயம் புரியாது.

உங்களுக்குப் பார்வை இருந்தால்,

எல்லாமே புரியாத புதிராகவும்,

அதிசயமாகவே காணப்படும்.

இதற்கு உங்களுக்கு விடை கிடைக்காது.

நீங்கள் அதில் ஆழமாகச் சென்றால்,

அதன் புரியாத புதிர்த்தன்மை அதிகமாகுமே தவிர குறையாது.

அதன் ஆழத்திற்கு அடித்தளமே கிடையாது.

நீங்கள் ஆழமாகச் சென்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அந்த அதிசயம் மேலும் மேலும் கூடிக்கொண்டே செல்லும்,

அதனுடைய வண்ணங்கள், பல நறுமணங்கள் கூடிக்கொண்டும், மாறிக்கொண்டும் இருக்குமே தவிர, ஒருபோதும் குறையாது.

இதுவே ஒரு அதிசயம்.

புரியாத புதிர்தான்.

ஆனால், நீங்கள் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வரமுடியாது.

அந்த புரியாத தன்மைக்கு எந்த விளக்கமும் காணமுடியாது.

இந்தப் பிரபஞ்ச உயித்தன்மையை புரியாத புதிர் என்று ஒத்துக்கொண்டு ஒருவன் திருப்தி அடைந்தால் மட்டுமே,

அவன் வாழ்க்கையை பரவசத்துடன் வாழ முடியும் 🌎

💙 ஓஷோ 💙
-OSHO_Tamil

Comments