ஜோர்பா ஒரு பார்வை - OSHO
💃🏾ஜோர்பா ஒரு பார்வை
❤❤❤❤❤❤❤❤ இருண்டு போன கடந்த காலத்தை ஒரு மூட்டையில் கட்டி போட்டு கடலில் போட போகிறேன். எதுவும் என் வாழ்கையை மாற்றவில்லை.. நான் என் வாழ்கையை மாற்றபோகிறேன் . எனக்குள் இனிமேல் சுருங்கி போவதில்லை
முடிந்த அளவு நானும் மகிழ்ச்சியுற்று அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன் .மகிழ்ச்சியை படைக்க போகிறேன் அதற்கான வழிகளை தேடிகொண்டிருக்கிறேன் .புதுசாக எதையும் தேடி போய் என் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை இருப்பது அனைத்தையும் முழுமையாக கொண்டாடி அனுபவிக்க போகிறேன் .இதற்காக நான் கையில் ஏந்த போவது அன்பும் மனிதமும் எளிமையான வாழ்க்கை மட்டும் தான் ...இந்த வாழ்க்கை மிக மிக எளிமையானது அதை நாம் தான் பலவற்றை உள்ளே செலுத்தி சிக்கல் மிகுந்ததாக மாற்றிவிடுகிறோம் என்பதையும் உணர்கிறேன் .
துயரங்களையும் இழப்புகளையும் நடனமாடி இசையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு மனநிலையை எனக்கு கொடுத்த அவன் யார் ?அவனின் பெயரை மட்டும் சொல்ல விரும்புகிறேன் ஜோர்பா எனபது அவனின் பெயர் .
-OSHO_Tamil

Comments
Post a Comment