வாழ்க்கை ஒரு விடுகதையாக உங்களுக்குத் தோன்றுவது ஏனெனில் நீங்கள் மனதின் மூலம் பார்ப்பதுதான். - OSHO
❤ வாழ்க்கை ஒரு விடுகதையாக உங்களுக்குத் தோன்றுவது ஏனெனில்
நீங்கள் மனதின் மூலம் பார்ப்பதுதான்.
மனமின்றி உங்களால் பார்க்க முடிந்தால் வாழ்க்கை ஒரு புதிர்.
மனத்தின் மூலம் பார்த்தால் வாழ்க்கை ஏற்கனவே இறந்து விட்டது.
மனமின்றி நீங்கள் பார்த்தால் வாழ்க்கை இறப்பதே இல்லை.
உயிருள்ளவற்றை மனத்தால் உணர முடியாது.
இறந்து போனவற்றை பொருள்களை மட்டும்தான் மனத்தால் தொட முடியும்.
வாழ்க்கை அவ்வளவு நுட்பமானது.
மனம் அவ்வளவு முரடானது.
இந்தக் கருவி வாழ்க்கையைப் போல் அவ்வளவு நுட்பமானதல்ல.
அந்தக் கருவியினால் நீங்கள் தொடும்போது அதனால் வாழ்க்கையின் துடிப்பினை உணர முடியாது.
துடிப்பு மிகவும் நுட்பமானது.
நீங்கள்தான் அந்தத் துடிப்பே ❤
❣ ஓஷோ ❣
-OSHO_Tamil
Comments
Post a Comment