ஜோர்பாவும் அவன் முதலாளியும் - OSHO
🌹💐ஜோர்பாவும் அவன் முதலாளியும்
💐🌹‘உன் மூட்டையில் என்ன இருக்கிறது? உணவா? துணிமணிகளா? அல்லது ஏதும் உபகரணங்களா?
எனது தோழன் தோளை குலுக்கிச் சிரித்தான்.
‘ உனக்கு நல்ல நடைமுறை அறிவு இருக்கிறது ஆனால் மன்னிக்க வேண்டும்’
அவனுடைய உறுதியான நீண்ட விரல்களைக்கொண்டு மூட்டையில் ஒரு தட்டு தட்டினான்.
‘இல்லை..எதுவுமே இல்லை.. இது ஒரு சந்துரி’
‘சந்துரி? உனக்கு சந்துரி வாசிக்க வருமா?’
‘ ஏதோ ஒன்று என்னை உள்ளிருந்து உந்தித்தள்ளும், அப்போது சந்துரி வாசித்துக்கொண்டே சுற்றியுள்ள விடுதிகளுக்குச் செல்வேன், மசிடோனியாவின் பழங்காலத்து புகழ்பெற்ற மெட்டுக்களை இசைப்பேன், இதோ இருக்கிறதே இந்த தொப்பி, இதை நீட்டினால் போதும், அதில் காசு நிறைந்துவிடும்’
‘உன் பெயர் என்ன?’
‘அலேக்சிஸ் ஜோர்பா. 💐🌷🌷🌹🌹
-OSHO_Tamil
Comments
Post a Comment