ஏதாவது ஒருநாள் கண்ணாடி முன் நிற்கும்போது... - OSHO
ஏதாவது ஒருநாள் கண்ணாடி முன் நிற்கும்போது, இந்தச் சிறிய பரிசோதனையை முயற்சித்துப் பார். நீ கண்ணாடியை பார்க்கிறாய், உன்னுடைய சொந்த முகம் கண்ணாடியில் தெரிகிறது, உனது கண்களால் பார்க்கிறாய் _ இது வெளி நோக்கு. உன்னுடைய சொந்த முகத்தை _ கண்ணாடியில் பிரதிபலிக்கும் உன் முகத்தைப் பார்க்கிறாய் _ ஆனால் அது உனக்கு வெளியே இருக்கும் பொருள்.
பிறகு, ஒரு வினாடி இந்த முழுச் செயல்பாட்டையும் தலைகீழாகப் பார். கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பம் உன்னைப் பார்ப்பதாக உணர்ந்து பார். நீ பிம்பத்தைப் பார்ப்பது என்றில்லாமல் பிம்பம் உன்னைப் பார்க்கிறது. அப்போது நீ மிகவும் வித்தியாசமாக இருப்பாய். சில வினாடிகள் முயற்சி செய், நீ மிகவும் உயிர்ப்பாக உணர்வாய்; அளவற்ற சக்தியுடைய ஏதோ உன்னுள் நுழையும்.
நீ பயப்படலாம், ஏனெனில் உனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. சக்தியின் முழுமையான வட்டத்தை நீ பார்த்திருக்க மாட்டாய்!...
--ஓஷோ--
-OSHO_Tamil
Comments
Post a Comment