Google

நான் ஜோர்பா புத்தாவை பற்றிப் பேசுகிறேன்..- OSHO



நான் ஜோர்பா புத்தாவை பற்றிப் பேசுகிறேன் . அதாவது நான் உலகத்தைப் பற்றியும் தியானதன்மை நிறைந்த மனிதனைப் பற்றியும் பேசுகிறேன். ஓர் உண்மையான புத்தா ஆன்மிக வளர்ச்சியினை விரும்புகிறார் . ஆனால் வறுமை ,ஏழ்மை இவைதான் ஆன்மிகம் என்று ஒரு புத்தர் கருதுவது இல்லை .அவர் வாழ்வில் செல்வ செழிப்பிற்கும் வளமைக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை .உனக்கு இரண்டு உலகங்களும் கிடைத்தால் ,ஏன் இரண்டையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.? எதற்க்காக தேர்த்து எடுக்க வேண்டும் ?

நான் வசதியாக வாழ்ந்து இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் எதையும் செய்தது இல்லை .ஆனால் அது என்னுடைய தியானத் தன்மைக்கு இடையுறாக இருக்கவில்லை ,எனவே எனது சொந்த அனுபவத்தின் ஆதாரத் தோடு உனக்கு கூறுகிறேன். நீ வசதியாக வாழ்ந்துக் கொண்டு தியான தன்மையோடு இருக்க முடியும்

--ஓஷோ --
-OSHO_Tamil

Comments