நம்பும் மனிதன் ஒரு மூடிய மனிதன் - OSHO
நம்பும் மனிதன் ஒரு மூடிய மனிதன்: அவனுடைய கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்டுள்ளன. அவன் ஒருவிதமான சிறையில் வாழ்ந்து வருகிறான். அவன் ஒரு வகையான சிறையில்தான் வாழ்ந்தாக வேண்டும்;
அவன் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்தால், சூரியன் உள்ளே வரும், காற்று உள்ளே வரும், மழை உள்ளே வரும், அப்போது அவனது நம்பிக்கைத் திட்டம் பாதிப்புக்குள்ளாகலாம். ஒவ்வொரு திசையிலிருந்தும் சத்தியம் உள்ளே வரும்போது, அவனால் தனது நம்பிக்கையைப் பாதுகாக்க முடியாமல் போய்விடக் கூடும். அவன் சத்தியத்திடமிருந்து தப்பியாக வேண்டும்;
அவன் ஜன்னல்கள் அற்ற மூடப்பட்ட உலகத்தில் வாழ்ந்தாக வேண்டும், அப்போது எதுவும் அவனைப் பாதிக்க முடியாது, அப்போது அவன் தொடர்ந்து நம்பிக் கொண்டிருக்கலாம், பாதிக்கப்படாமலிருக்கலாம். இதுதான் சமுதாயத்திற்க்கு நல்லது, ஆனால் இது தனிமனிதனின் ஆரோக்கியத்திற்கு அபாயகரமானது...
--ஓஷோ--
-OSHO_Tamil
Comments
Post a Comment