ஒரு எளிமையான கூற்று, உள்ளே போவது - OSHO
ஒரு எளிமையான கூற்று, உள்ளே போவது
. நீங்கள் என்ன
சொல்கிறீர்கள் என்று நீ என்னை கேட்கிறாய்.
உள்ளே செல் என்ற இந்த எளிய வார்த்தையை
உன்னால் புரிந்து கொள்ள முடியாதா உனக்கு இந்த வார்த்தையின் பொருள் தெரியும் என்று
எனக்குத் தெரியும்.
ஆனால் உனக்கு வெளியே போக மட்டுமே சொல்லித்தரப்பட்டிருப்பதால்
உள்ளே போவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது.
உன்னுடைய தன்னுணர்வு மற்றவர்களை
பார்த்தே பழக்கப்பட்டிருப்பதால் அது தன்னை நோக்கி திரும்பும் வழியை மறந்து
விட்டது.
உள்ளே போவது என்பது உண்மையிலேயே உள்ளே போவது
அல்ல. அது வெளியே போவதை நிறுத்துவதாகும்.
சுவாசம் உள்ளே செல்வதை கவனித்தால், அப்போது
எண்ணங்களும் உள்ளே செல்வதை உன்னால் கவனிக்க முடியும்.
நீ உன்னுள் சென்றால் எப்படி ஒருவர் புத்தராக
முடியும் என்பதை நீ கண்டறிவாய்.
உள் நோக்கி செல்வதற்கான வழிகளை ஒருவர் கற்றாக
வேண்டும்.
நினைத்தல் வெளியே செல்வது,
எதையும்
சிந்திக்காமல் இருப்பது உள் நோக்கி செல்வதாகும்.
Osho_Tamil
Comments
Post a Comment