இருப்பியல் - OSHO
இருப்பியல்
உனக்குள்ளே போகப் போக நீ இருப்பதை உணர்கிறாய்
நீ இருப்பது என்பது இதுவாகவோ அதுவாகவோ அல்ல வெறுமனே இருப்பது
புத்தர் கூறுகிறார் :
இன்னாரெனக் குறிப்பாக யாராகவும் இல்லாமல் நான் இருக்கிறேன்
நான் புத்தர்
நான் பிரக்ஞை
எனக்கு எந்த அடையாளமும் இல்லை
அன்பு என்னும் சக்தியாக நீ ஆகி விடும்போது
வாழ்வை நீ ஏற்றுக் கொள்கிறாய்
வாழ்வுதான் கடவுள்
நீ இயற்கையின் ஒரு பகுதி
அதை எதிர்த்து போராடாதே
வாழ்க்கையை அனுபவித்து தான் கடக்க முடியும்
உடலளவில், மனத்தளவில்,ஆன்மீகத்தில் ஆனந்தம் இருக்க வேண்டும்
உடல் மனம் ஆன்மா ஆகியவற்றின் சுகங்கள் ஒன்றாகிப்போய்
அந்த லயத்தில் நான்காவது மனிதன் ஜனிக்க வேண்டும்
உண்மையான ஆரோக்கியம் உடைய மனிதனுக்கு கனவுகளே வராது
அவன் கனவு காண்பதற்கு அங்கு எதுவும் இருப்பதில்லை
அவனுடைய ஆழ் மனம் இயல்பாகவும் சுத்தமாகவும் இருக்கிறது
இன்றைய நாளை பரவசததோடு வாழ்ந்துவிடு
இன்றைய பரவசத்தில் இருந்துதான் நாளை வரப் போகிறது
நிகழ் காலம் அழகாக இருந்தால் எதிர் காலம் சொர்க்கமாகும்
இருப்பதே போதும் இருப்பே உனது கோயில்
மரங்கள் தொழுதுக் கொண்டே இருக்கின்றன
மலைகள் தியானத்தில் இருக்கின்றன
சத்தியம் உன் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும்
அதற்கு நீ ஒரு சாட்சியாக இருக்க
வேண்டும்
சத்தியத்தை இரவல் வாங்கிக் கொள்ள முடியாது
நீ ஒரு வெறுமை
யானவனாக மாறி விடு
அந்த ஒன்றுமற்ற வெறுமைதான் இறைவன்
வாழ்க்கைக்கு எந்த நோக்கமும் இல்லை, குறிக்கோளும் இல்லை
இந்த உலகம் வாழ்க்கையைப் படைக்கப் படவே இல்லை
அது எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது
எந்த குறிக்கோளும் இல்லாததுதான் வாழ்வு அதுதான் வாழ்வின் அழகு
" ஏஸ் தம்மோ ஸனந்தனோ "
--ஓஷோ--
-OSHO_Tamil
Comments
Post a Comment