முல்லாவின் முதலாளி அவரை ஏன் முல்லா ஒரு நாளை பார்த்தாற்போல் லேட்டாக வருகிறீர்கள் என்று கேட்டார். -OHSO
முல்லாவின் முதலாளி அவரை ஏன் முல்லா ஒரு நாளை
பார்த்தாற்போல் லேட்டாக வருகிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு முல்லா, நீங்கள்தான் அதற்கு காரணம்.
இங்கே ஆபீஸில் வாட்சைப் பார்க்கக் கூடாது என்று நீங்கள் கூறியிருப்பதால் அதே
வழக்கம் வீட்டிலும் தொடர்கிறது. அங்கேயும் வாட்சை நான் பார்ப்பதில்லை என்று பதில் சொன்னான்.
2.
தன்னிடம் புதிதாக வேலைக்கு சேர்ந்த முல்லாநசுரூதீனிடம்
முதலாளி, நீங்கள் முன்பின் எங்கேயும் வேலை செய்த அனுபவம் இல்லாத போது என்ன காரணத்தால் என்னிடம் ஐந்து வருடம் வேலை செய்த அனுபவம் இருப்பதாக கூறினீர்கள் என்று கேட்டார்.
நீங்கள்தானே கற்பனை வளமுள்ள ஆள் வேண்டும் என்று
விளம்பரம் செய்திருந்தீர்கள் என்று பதில் சொன்னான்.
இப்படித்தான் மனம் எப்போதும் உன்னை
நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. மனம் உன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே பயன்படுகிறது. உண்மையான வாழ்வை சந்திக்க ஒருபோதும் அது உதவாது.
Osho_Tamil
Comments
Post a Comment