Google

சுய ஒழுக்கமும் விழிப்பும் கொண்டவன் பாதையில் ஆசை குறுக்கிடுவதில்லை - OSHO



சுய ஒழுக்கமும் விழிப்பும்
கொண்டவன் பாதையில்
ஆசை குறுக்கிடுவதில்லை '

மனிதன் தன்னைத் தானே உருவாக்கிக்
கொள்ள வேண்டியிருக்கிறது ...

நீ உன்னையே படைத்துக் கொள்ள
வேண்டியிருக்கிறது ...

நீ நீயாகவே விழிப்படைந்துக் கொள்ள
வேண்டியிருக்கிறது ...

விழிப்படைந்த மனிதன் பிரபஞ்சத்தின்
மையம் என்கிறார் புத்தர் ...

மரம் தன் இதயத்தை திறந்து விடுவதுதான்
அது பூத்துக் குலுங்குவது ...

அது தன் மணத்தை வெளியிடுவது ...

நீயும் ஒரு மலராகி விடு
ஒரு மலராகும்போதுதான் மணமாகி
காற்றில் கரைய முடியும் ...

பழக்க வழக்கங்களால் வளர்த்துக்
கொள்வதல்ல ஒழுக்கம் ..

சுய ஒழுக்கம் தியானம் என்னும்
மலரின் நறுமணம் ...

முதலில் தியானத்தை பின்பற்றினால்
பின் அறநெறி நிழலாக வந்துசேரும் ...

இந்த பிபஞ்சத்தை எப்படி ருசிப்பது
என்று உனக்குத் தெரிந்தால் ...

பிபஞ்சத்தோடு எப்படித் தொடர்பு
கொள்வது என்று தெரிந்தால் ...

எல்லா புத்தர்களையும் ஒன்றாக
இருக்கக் காண்பாய் ...

காலம் கடந்த நிலையில் எல்லா
ஞானிகளும் சம காலத்தவரே ...

தியானத்தில் காலம் இடம் இரண்டையும்
கடந்து விடுகிறாய் ...

நேரம் தெரியாது  போகும்
இடம் தெரியாது போகும் ...

அந்தக் கணத்தில் நீ நீயாகவே
இருக்கிறாய் ...

மலர்கள் மட்டும் தான் மறைந்து
விடுகின்றன ...

மணம் நித்தியமாகிப்
போகிறது ....

ஓஷோ ...
தம்ம பதம் 1...
-OSHO_Tamil

Comments