Google

நம்பிக்கையின் அருகே அவநம்பிக்கை செல்லாது. - OSHO



💚 நம்பிக்கையின் அருகே அவநம்பிக்கை செல்லாது.
நம்பிக்கை அவநம்பிக்கையை நசுக்கி விடுகிறது.
அது ஒருவிதமான ஆசையாகும்.
"நான் கடவுளை நம்புகிறேன்" என்று நீங்கள் சொல்லும்போது, "கடவுளின்றி என்னால் வாழமுடியாது.
அவரது துணை இல்லாது இருட்டில் தவிப்பது சிரமம்.
கடவுள் கோட்பாடு இல்லாத போது மரணம் நாலாபுறமும் சூழ்ந்துவிடும்." என்றுதான் கூறுகிறீர்கள்.
கடவுள் என்ற கோட்பாடு உங்களுக்கு உதவி செய்கிறது.
தனிமையை யாரும் விரும்புவதில்லை.
பாதுகாப்பற்று இருக்க நினைப்பதில்லை.
எனவே, கடவுள் என்ற நம்பிக்கையைத் துணைக்கு வைத்துக் கொள்கிறீர்கள்.
நம்பிக்கை என்பது எதை அடிப்படையாகக் கொண்டது என்று நீங்கள் எப்போதாவது தெரிந்து கொண்டிருக்கிறீர்களா......???
அது அறியாமை சார்ந்தது.
ஏதாவது ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
தெரியாதிருந்தால் உங்களுக்குத் தெரியாது என்பதையும் புரிந்துகொள்வீர்கள்.
நம்பிக்கை உங்களை ஏமாற்றிவிட முடியும்.
உங்கள் மனதில் அது, தெரியாததையும் தெரிந்ததாக எண்ணும் சூழலை உருவாக்கிவிடக்கூடும்.
நம்பிக்கை என்பது உறுதியானதல்ல.
நம்புகிறேன் என்று பலமாக அழுத்திச் சொல்லும்போது உங்களிடம் உள்ள அவநம்பிக்கை கண்டு அஞ்சுகிறீர்கள் என்று அர்த்தம் 💚
👒 ஓஷோ 👒
-OSHO_Tamil

Comments