உண்மையான புரிதல் உள்ள ஒரு மனிதன் தனிமையாக இருப்பான்.- OSHO
உண்மையான புரிதல் உள்ள ஒரு மனிதன் தனிமையாக இருப்பான்.அவன் எந்த ஒரு கட்சியையும்,எந்த ஒரு அமைப்பையும்,எந்த திருச்சபையையும் சேர்ந்தவனாக இருக்க மாட்டான்.
புரிதலின் எல்லா வடிவங்களுக்கும் அவன் கிடைக்கக்கூடியவனாக இருப்பான்.ஆனால் அவன் பாகுபடற்று இருப்பான்.என்னைப் பொறுத்த மட்டில் இந்த பாகுபாடற்ற தன்மையானது மதத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும்.
உண்மையான சமயப் பற்றுடையவன் தனிமனிதனாகவே இருக்கிறான்.அவன் தனிமையில் இருக்கிறான்.மேலும் அவனது தனிமையில் மாபெரும் அழகும், மாபெரும் கம்பீரமும் இருக்கிறது.
நான் உங்களுக்கு தனிமையைக் கற்றுக்கொடுக்கிறேன்.நான் தனிமையின் அழகை, அதன் கம்பீரத்தை,அதன் நறுமணத்தை உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன்.
உங்களது ஏகாந்தத்தில் நீங்கள் எவரெஸ்ட்டின் உச்சியைச் சென்றடைவீர்கள்.உங்களது ஏகாந்தத்தில் தொலைதூர நட்சத்திரத்தையும்கூட தொடுவீர்கள்.உங்களது ஏகாந்தத்தில் நீங்கள் உங்களது முழு சக்தியுடன் மலர்ச்சி அடைவீர்கள்.
ஒருபோதும் ஒரு நம்பிக்கையாளனாக ஆகிவிடாதீர்கள்.எதையும் பின்பற்றுபவராக ஒருபோதும் ஆகிவிடாதீர்கள்.எந்த ஒரு அமைப்பின் அங்கமாகவும் ஆகிவிடாதீர்கள்.உங்களுக்கு நீங்களே உண்மையான அதிகாரத்துடன் இருங்கள்.உங்களுக்கு நீங்களே நம்பிக்கைத் துரோகம் செய்து விடாதீர்கள்.
--ஓஷோ--
-Osho_Tamil
Comments
Post a Comment