Google

மனம் நம்பும்,அறியாது. - OSHO



மனம் நம்பும்,அறியாது.

மனம் கடவுள் இருக்கிறார் என்றோ அல்லது இல்லை என்றோ நம்ப இயலும்.

இது நம்பிக்கை.நம்பிக்கை முதலில் எண்ணமாய் தோன்றி,பின் ஆராய்ந்தறிந்து இறுதியில் ஒரு தீர்வாய் அமைவது.

ஒருவர் பேசும்போது மனதே ஊடகமாய் செயலாற்றுகிறது. அதனைக் கேட்பதிலும் அந்த மனமே ஊடகமாய் செயலாற்றும்.

ஆனால், மனதை முற்றிலும் வெளியில் எறிய வேண்டும் எனக்கூறும் போது மனம் அதனை உட்கிரகிக்கும், ஏற்றுக்கொள்ளாது.

மனதின் மூலம் உண்மையை அறிய இயலாது என்று நீங்கள் நம்பத் தொடங்கினால் மனதுக்குள்ளாகவே இருப்பீர்கள்.

நீங்கள் மனதிற்குள்ளாகவே இருக்கிறீர்கள். காரணம், மனதுக்கப்பால் இருப்பவற்றை உங்களால் நம்ப இயலவில்லை.

மனதைத் தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் மனதுக்கப்பால் செல்ல முடிவதில்லை. மனதை விட்டு வெளியேறுவதென்றால் ஒருபடி மேலே செல்ல வேண்டும்.

அம்முயற்சியே தியானம் ஆகும்.

இதனாலாயே தியானம் பகுத்தறிவிற்கு எட்டாததாய்த் தோன்றுவது, அதனை அர்த்தமுடையதாகவோ, சரியான காரணமுடையதாகவோ மாற்ற இயலாது.

அதனை அனுபவிக்க வேண்டும்.

அனுபவித்தால் மட்டுமே அறிய இயலும்.

--ஓஷோ--
-OSHO_Tamil

Comments