தெளிவான மன நிலையின் உச்ச கட்டம் ஞானம் ...- OSHO
தெளிவான மன நிலையின்
உச்ச கட்டம் ஞானம் ...
அது முற்றிலும் தெளிவடைந்த
நிலை ...
எந்த நேரத்திலும் மௌனம் ,
சாந்தம் , பிரக்ஞை ...
இவைகள் ஞானமடைந்த
ஒருவரின் இயல்புகளாகி விடும் ...
எந்த நேரத்திலும் தளர்வாக
இருங்கள் ...
எல்லாவற்றையும் பிரபஞ்ச இருப்பின்
கைகளில் விடடு விடுங்கள் ...
முழு நம்பகத் தன்மையுடனும் முழுமையான
அமைதியுலும் இருங்கள் ...
வாழ்வில் வளர்ச்சி அடைவது என்பது
தனக்குள்ளே ஆழ்ந்து செல்வது ...
வாழ்க்கை ஒரு தேடல் .. அது ' நான் யார் '
என்பதை அறியும் தேடல் ...
உங்கள் அடிப்படை இயல்பு
பரிபூரண மௌனம் ...
சாந்தம் , அமைதி , வெறுமை ,
இவைகள்தான் ...
தன் மீது நம்பகத் தன்மை கொண்டவன்
அதன் அழகையும் ...
மலர்ச்சியையும் கண்டு
கொள்கிறான் ...
தான் மேலும் தளர்வோடும் எதற்கும்
தடையற்று இருந்தால் ...
சாந்தமும் அமைதியும் சலனமற்ற
நிலையும் ...
பொருந்தி வருவதைக் கண்டு
கொள்கிறான் ...
நீங்கள் ஒரு தனி மனிதனாக
இருங்கள் ...
உங்களுக்கு சத்திய தரிசனம்
கிடைக்கும் ...
--ஓஷோ--
ஓஷோவின் வைரங்கள்
-Osho_Tamil
Comments
Post a Comment