Google

சிந்தனை வேறு யோசனை என்பது வேறு - OSHO



சிந்தனை வேறு யோசனை என்பது வேறு

யோசனை திசையற்றது.

அது உங்களை இழுத்தடித்துக் கொண்டே இருக்கும்.

திசைப் படுத்தப் பட்ட யோசனை தான் சிந்தனை.

யோசனைகள் என்பவை தொடர்ந்து வரும் எண்ணங்களே.

நீ அமைதியாக இருக்கும் போது உனது எண்ணங்களை பின்னோக்கி போய் பார்க்க முயற்சி செய்.

அவை எங்கிருந்து வந்தன என்று பின்னோக்கி பார்.

அப்போது வேறொரு எண்ணம் அங்கு இருப்பதை பார்ப்பாய்.

இந்த இரண்டு எண்ணங்களுக்கும் இடையே எந்த சம்பந் தமும் இருக்காது.

இந்த எண்ணங்கள் தங்களைத் தாமே வழி நடத்திக் கொள்கின்றன.

ஓரே ஒரு பாதையில் மட்டும் நீ உனது எண்ணங்களை செலுத்தும் போது அது சிந்தனை ஆகிறது.

யோகாவில் மனம் ஒரே புள்ளியில் குவிந்து இருக்கிறது.

தியானத்தில் மனம் என்பதே கிடையாது.

தியானத்தை மனதால் புரிந்து கொள்ள முடியாது.

மனம் அதுவே மனதைத் தாண்டி எப்படி போக முடியும்

மனம் அல்லாத ஒன்றை அடைவதற்கு.....
ல்
மனதின் செயல்பாடு எப்படி உதவ முடியும்......???

நீ யோசிக்கும் செயல் பாட்டைக் குறைத்துக் கொண்டே வந்தால்....

நீ உனது சிந்தனை யைக் கரைத்துக் கொண்டே வந்தால்.......

சிறிது சிறிதாக மெதுவாக நீ மனமற்ற நிலையை அடைவாய்.

அப்போது மனம் இல்லாமல் போவதற்கு மனமே உதவ முடியும்.

அடி ஆழத்தில் மனம் என்பது எண்ணங் களால் நிரப்பப் பட்ட
வெற்றிடமே.

சாதாரண யோசனையில் இருந்து சிந்தனைக்கு மாறுங்கள்.

சிந்தனையில் இருந்து கவனத்தைக் குவிப்பதற்கு மாறுங்கள்.

பிறகு கவனத்தைக் குவிப்பதில் இருந்து தியானத்தில் குதித்து விடுங்கள்.

அப்போது மனமற்ற நிலையின் அற்புதத்தை புரிந்து கொள்வீர்கள் <3

--ஓஷோ--
தந்த்ரா ரகசியங்கள்
-OSHO_Tamil

Comments