ஓஷோவின் விளக்கம் – ஏழு பள்ளத்தாக்குகள் - OSHO
ஓஷோவின் விளக்கம் – ஏழு பள்ளத்தாக்குகள் – பகுதி 7
ஓஷோ மனிதன் கடந்து செல்லும் பாதையில் ஏழு பள்ளத்தாக்குகள் இருக்கின்றன என்று கூறுகிறார். அதைப் பற்றி அவர் கூறுவதன் 7 ஆவது பள்ளத்தாக்கு தொடர்ச்சி.
.
இறுதியான, கடைசி பள்ளத்தாக்கான ஏழாவது பள்ளத்தாக்கு
கொண்டாட்டத்திற்க்குரியது. மறுபிறப்பு உயிர்த்தெழுதல் ஏழாவது பள்ளத்தாக்கில்
நிகழ்கிறது. இதுதான் தேஜஸ் ரீதியாக, ஒளி ரீதியாக, இறைமை ரீதியாக மறுபிறப்பு
எடுத்தல். இதைத்தான் கிறிஸ்துவர்கள் உயிர்த்தெழுதல் எனக் கூறுகின்றனர். இப்போது
நேர் மறையுமில்லை, எதிர்மறையுமில்லை. இப்போது இருமை கிடையாது, ஒன்றேதான் உள்ளது.
ஒருங்கிணைப்பு எழுகிறது – இதைத்தான் இந்துக்கள் அத்வைதம் என்றழைக்கின்றனர். இருமை
மறைந்து விடுகிறது. ஒருவர் வீடு சென்றடைந்து விடுகிறார். துதிப்பாடல் பள்ளத்தாக்கு
– அல் – ஹசல்லாலி இதற்கு ஒரு அழகான பெயர் கொடுத்திருக்கிறார். இப்போது எதுவும்
அங்கில்லை – ஒரு பாடல், கொண்டாட்டதிற்கான கானம், கடவுளின் துதி, அபிரிமிதமான
சந்தோஷம் தான் உள்ளது. இதைத்தான் நான் இறுதியான உச்சக்கட்டம் என அழைக்கிறேன்.
நான் இந்த பள்ளத்தாக்கிற்கு பெயர் கொடுக்க முயன்றால் இதை உச்சக்கட்ட
பள்ளத்தாக்கு என அழைப்பேன். கொண்டாட்டம் மட்டுமே உள்ளது. ஒருவர் மலர்கிறார்,
விரிகிறார், மணம் பரவுகிறது. இப்போது போக எதுவும் இடமில்லை. மனிதன் எதற்காக
போராடுகிறானோ, எதை தேடி ஒடுகிறானோ, எதை துழாவுகிறானோ அதுவாகவே மாறுகிறான்.
மனிதன் ஒரு முரண்பாடு. அவன் எதுவோ அதுவாக இல்லை. அவன் எதுவாக இல்லையோ அப்படி
இருக்கிறான். நீ இறுதி நிலையை உணரும் நாளில் உனது இதயத்திலிருந்து ஒரு சிரிப்பு
எழும், ஏனெனில் நீ எதுவாக இப்போது உணருகிறாயோ அப்படித்தான் எப்போதும்
இருந்திருக்கிறாய் என்பது தெரியும். அது உனக்கு தெரியாமல் இருந்தது. எதிர்காலம்
உன்னுள் மறைந்திருந்தது, உன்னுள் இருந்தது. உன்னுள் இருக்கிறது. நீ அதை கண்டு
பிடிக்க வேண்டும். இந்த ஏழு பள்ளத்தாக்குகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய
பள்ளத்தாக்குகள்.
இது சூஃபி வரைபடம், இது ஒரு மிக அழகான வரைபடம்.
Source - The Secret of Secrets Vol 2 che #1
-OSHO_Tamil
Comments
Post a Comment