Google

ஆன்மீகம் என்பது ஆராய்ச்சிகள் செய்வதா இல்லை வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதா - OSHO



ஆன்மீகம் என்பது ஆராய்ச்சிகள்  செய்வதா இல்லை வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதா

ஆயுள் முழுவதும் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தால் உண்மை அல்லது உன்னை எப்பொழுது உணர போகிறாய்.

காலத்திற்கு தகுந்தாற் போல் மகான்கள் உருவாகி கொண்டுதான் இருக்கிறார்கள் அவரை பற்றி குறை சொல்பவர்களும் வந்து கொண்டேதான் இருக்கிறார்கள இது ஒன்றும் புதியது இல்லை

உன்னால் உண்மையை ஏற்று கொள்ள முடியவில்லை என்றால் முரண்பாடு உன் மனதில் மட்டுமே கழட்டி விட்டு கடந்து செல்ல வேண்டிய ஒன்றை காலில் மாற்றி கொண்டு இருப்பவர்களுக்கு உண்மையை ஒரு போதும் உணர முடியாது

கொஞ்சம் தன் சுயத்தில் நிலை பெற்றால் தெரியும்  யாரையும் பின் பற்ற வேண்டிய அவசியம் இருக்காது என்று. ஒரு குரு உனக்கு ஒரு வழிகாட்டி மட்டுமே அதுவும் உன் சுயத்தில் நிலைபெற செய்வதாக மட்டுமே இருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே உன்னை உணர முடியும்.

உங்களுக்குள் அது என்றால் என்ன இது என்றால் என்ன என்று கேள்விகள் ஓடி கொண்டு இருந்தால் உன்னை உணர அதிக காலம் ஆகும்

பல வருடங்கலாக கேள்வி தலத்தில் இருந்தவர் மூன்று நாளில் உணர்வு தளத்திற்க்கு வந்து இருக்கிறார்கள் இதையே பல  பெயரால் நம்பமுடியவில்லை ஆனால் வந்தவர்கள் உணர்ந்து வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.உண்மை உன்னை தேடி வரும் போது கண்ணை மூடிக் கொண்டு கற்பனையில் வாழ்ந்தால் ஒரு போதும் தன்னை உணர முடியாது.

இறைவனை உணர்ந்து வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கிற மனிதர்களுக்கு மட்டுமே தெரியும் யார் உண்மையாக இறைவனை தேடி கொண்டு இருக்கிறார்கள் என்று.
இறைவன் சூட்சமம்மாக பல வழிகளை கொடுத்து கொண்டுதான் இருக்கிறான் நாம் தான் அறிவை கொண்டு அதை உதாசினம் செய்கிறோம்.

இறைவன் தன்னை உணர்ந்த அவனே உங்களை தேடி கொண்டு இருக்கிறான் நீங்கள் கவனத்தை வேறு எங்கேயை வைத்து இருக்கிறிர்கள்.

உங்கள் தேடுதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களை தேடி வரும் வழிகளும் உண்மையாகதான் இருக்கும்  அந்த network ல் இணைந்து விடுங்கள் முழுமையை அதுவே உணர்த்தி விடும்.

என்னை நீங்கள் இயற்கை ஒலி(ளி)காக  மார்கெட்டிங் செய்கிறேன் என்று நினைத்தாலும் பராவயில்லை என் வேலையை நான் சரியாக செய்து கொண்டு இருக்கிறேன் அதுவே இறைவனுக்கு நான் செலுத்தும் நன்றி உணர்வு.
-OSHO

Comments