Google

சூஃபி மகான் அற்புத தெளிவு,,,





சூஃபி மகான்
அற்புத தெளிவு,,,

சூஃபி மகான் அவர்கள் மிகவும் பசியோடு இருந்தார்.

அவர் நான்கு நாட்களாக தொடர்ந்து பட்டினியாகக் கிடந்ததால் அவரால் எழுந்து நடமாடவும் முடியாமல் இருந்தார்.

பசியைத் தாங்க முடியாமல் ஏதேனும் கிடைக்காதா என்ற ஆர்வத்துன் அவர் வெளியில் சென்று தேட ஆரம்பித்தார்.

அழுகிப் போன கிழங்கு ஒன்று கிடந்தது. அதையும் கையில் எடுத்துக் கொண்டார்.

ஆனால் அழுகிப் போன அைத சாப்பிட மனம் வரவில்லை. அதை அப்படியே போட்டுவிட்டு இருப்பிடத்திற்கு வந்து விட்டார்.

சற்று நேரத்துக்கெல்லாம், ஒருவர் சூஃபி அவர்களை தேடிக் கொண்டு வந்தார்.

ஐநூறு பொற்காசுகள் அடங்கிய ஒரு பையை நீட்டி இது உங்களுக்காக.,,, என்றார்.

என்ன இது? எனக்கு ஏன் தருகிறீர்கள்? என்று மகான் வினவ, அந்த மனிதர் விளக்க துவங்கினார்.

பத்து நாட்களாக நான் கப்பலில் பயணித்து வருகிறேன். கப்பல் திடீரென்று ஓரிடத்தில் மூழ்குகின்ற நிலைமைக்கு வந்துவிட்டது.

எல்லோரும் பிரார்த்தனையில் ஈடுபடலாயினர். என்னுடன் இருந்த பயணிகள் அனைவரும், கப்பல் மூழ்காமல் உயிர் தப்பி விட்டால் தத்தம் வசதிக்கேற்ப ஏதோ ஒன்றை தருமம் செய்வதாக வேண்டிக் கொண்டார்கள்.

இந்த ஆபத்திலிருந்து மீண்டு விட்டால், நான் கப்பலை விட்டு இறங்கியதும், எனக்கு தென்படுகின்ற முதல் ஆளுக்கு ஐநூறு பொற்காசுகள் தருவதாக நேர்ந்து கொண்டேன்.

என் கண்களுக்கு காட்சி தந்த முதல் ஆள் நீங்கள்தான். ஆகவே இது உங்களையே சார்ந்தது. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.

அதை ஏற்றுக் கொண்ட சூஃபி மகான் தன் மனதை நோக்கி கூறலானார் -

மனமே,,, உனக்குச் சேர வேண்டியது பத்து நாட்களாக உன்னை நாடி வந்து கொண்டிருந்தது.

நீயோ பாழடைந்த வெளியில் எல்லாம் சென்று தேடிக் கொண்டிருந்தாய்".

Comments