நீங்கள் இந்த உலகிற்கு எந்த ஒரு உடைமைகளும் இல்லாமல் வந்தீர்கள்.- OSHO
நீங்கள் இந்த உலகிற்கு எந்த ஒரு உடைமைகளும் இல்லாமல் வந்தீர்கள்.மேலும் எந்த ஒரு உடைமைகளும் இல்லாமலேயே நீங்கள் இந்த உலகைவிட்டு போகப்போகிறீர்கள்.
ஒருநாள் இந்த ஒட்டுமொத்த விஷயமும், ஒரு காலத்தில் நீங்கள் பார்த்த ஒரு கனவு போல ஆகிவிடப்போகிறது.
உங்களது மரணத்தின்போது அந்த விஷயங்கள் எல்லாம் ஏதோ கனவில் கண்டதுபோல நீங்கள் நினைவு கூரலாம்.
அவை நிகழும்போது அவை அந்த அளவுக்கு உண்மையானவை போன்று இருந்தன.
ஆனால் இறக்கும் தருவாயில் எல்லாமே உண்மையற்றதாக ,மனதில் வெறும் வார்த்தைகளாக மட்டுமே ஆகிவிடுகிறது.
உண்மையான துறவறம் என்பது இந்த உலகை துறவு கொள்வது அல்ல.
இந்த உலகைத் துறந்துவிட்டு இமயமலைக்கோ, அல்லது மடாலயங்களுக்கோ தப்பித்து செல்வது அர்த்தமற்றது.
உண்மையான விஷயம் என்னவென்றால் நீங்கள் உங்களது மனதில் இருந்து வார்த்தைகளை கீழே போட்டுவிட்டு, ஒரு மௌன கவனிப்பாளராக, ஒரு தூய சாட்சியாக ஆகி விடுவதே ஆகும்.
--ஓஷோ--
-OSHO_Tamil
Comments
Post a Comment