Google

சில நேரங்களில் அமைதிநிலை நீரோடை போல வந்து சேரும்.



தியானம் செய்யும்போது சில நேரங்களில் அமைதிநிலை நீரோடை போல வந்து சேரும். கவனித்துக் கொண்டிரு. அமைதி நிலை நிகழ்கிறது, நான் சாட்சி மட்டுமே என்பது போல தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிரு. சில நேரங்களில் ஆனந்தம் நீருற்று போல பொங்கி வரும், ஒவ்வொரு நாடி நரம்பிலும் பரவும், அதையும் தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிரு. எதையும் பிடித்து தொங்காதே.
உனது வெறுமை ஆனந்த தன்மை, அமைதி நிலை, பிரகாசம் ஆகியவற்றின் அலைகளை அனுமதிக்கும்.
உன்னுடன் நீ அமைதியாக இருத்தலே அமைதி நிலை.
உனக்குத் தேவை உயிர்த்துடிப்புள்ள அமைதிநிலை மற்றும் சுறுசுறுப்புடன் கூடிய மௌனம்.
உள்ளார்ந்த மௌனமும் உள்ளார்ந்த அமைதியும்தான் முழுமையான தளர்வு நிலையின் கனிந்த நிலை.
உள்ளார்ந்த அமைதி தியானத்தின் பக்க விளைவே.
உள்ளார்ந்த அமைதியின் நிழல் போல அன்பு தொடர்ந்து வரும்..

Comments