Google

மனித குல பரிணாம வளர்ச்சியை நான்கு கட்டங்களாக பிரிக்கலாம் - OSHO



🌏 மனித குல பரிணாம வளர்ச்சியை நான்கு கட்டங்களாக பிரிக்கலாம்

முதல் நிலை Geosphere எனப்படும் பிரக்ஞையற்ற நிலை

இதுதான் பொருள்களின் நிலை யாகும்

ஒரு பாறை பிரக்ஞையற்ற நிலையில்தான்
இருக்கிறது

அது ஒரு தூங்கும் புத்தர் தான்

அது புத்தராக மாறுவதற்கு பல லட்சம் வருடங்கள் ஆகலாம்

ஆகவேதான் தெய்வச் சிலைகளை கல்லில் வடிக்கிறார்கள்

பொருள்களின் இந்த நிலையை பதஞ்சலி சுசுப்தி என்று கூறுகிறார்

இது முழுமையான தூக்க நிலை

ஆன்மா கிடையாது மனம் கிடையாது

இது ஒரு மனமற்ற நிலை என்பதால் அங்கு "தான்" என்பது கிடையாது

ஒரு பாறைக்கு கால உணர்வு எதுவும் கிடையாது

இதுதான் சாசுவத நிலை என்பதாகும்

இரண்டாவது Biosphere எனப்படும் உயிரியல் நிலை

இது வாழ்வு life எனப்படும் முன் பிரக்ஞைத் தன்மை

இந்த நிலை வாழ்வாக உயிராக இருக்கிறது

இந்த நிலையில் பிரக்ஞை ஒரு கனவைப் போல இருக்கிறது

இதை பதஞ்சலி சொப்னா என்று கூறுகிறார்

இந்த இரண்டாவது நிலையில் தான்

மரங்கள் பறவைகள் மிருகங்கள் அனைத்தும் வருகின்றன

இவைகள் இறந்த காலத்தில் மட்டும் வாழ்கின்றன

அவைகளுக்கு கால உணர்வு தோன்றாது

மூன்றாவது கட்டம் Noosphere எனப்படும் தான் என்ற பிரக்ஞை நிலை

இதுதான் மனம் என்பதன் துவக்க நிலையாகும்

இந்த நிலையில் நான் என்பது சேர்ந்தே வரும்

அப்பொழுது பிரதிப் பிம்பம் ஆரம்பமாகிறது

எண்ணங்கள் தோன்றுகிறது

உடன் எதிர் காலமும் தோன்றுகிறது

இந்த மூன்றாவது மனத்தில் தான்
பிரக்ஞத் தன்மை

தன் பிரதி பலிப்பு
தன் எண்ணங்கள்
தனித் தன்மை

போன்றவைகளாக மாறுகிறது

இந்த மூன்றாவது நிலையை பதஞ்சலி விழிப்பு நிலை என்று கூறுகிறார்

நான்காவது கட்டம் Christosphere அல்லது
Buddhasphere என்று அழைக்கப் படுகிறது

இது மனம் கடந்த நிலை இது உங்களுக் குள்ளேயே அக நிலையில் உள்ளது

இந்த நிலை உங்களால் உண்டாக்கப் பட வேண்டியது

இதுதான் புத்த நிலை என்பதாகும் 🌏

💙 ஓஷோ

 மனித குல பரிணாம
வளர்ச்சி 💙

Comments