Google

தியானத்திற்கு தடைகளாக இருப்பவை எவை ?- OSHO



கேள்வி
பதில்
ஓஷோ,,,,

ஓஷோ , தியானத்திற்கு தடைகளாக இருப்பவை எவை ?

முதலாவது உங்கள் அகங்காரம் . அடுத்தது எப்பொழுதும் தொன தொனவென்று பேசிக்கொண்டிருக்கும் உங்கள் மனம் !"

ஓஷோ , நீங்கள் குழந்தைகளை நேசிக்கிறீர்களா ? உங்களுக்குக் குழந்தைகள் தேவையா ?

நான் குழந்தைகள்மீது அன்பு செலுத்துகிறேன் . ஆனால் அதை உண்டாக்க விரும்பியதே இல்லை ! காரணம் , அதற்காக நான் பல நன்மைகளை இழக்க வேண்டி வரும் . முக்கியமாக இப்படி உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்க முடியாது ! அடுத்து எனக்கு சம்பாதிக்கத் தெரியாது ! "

ஓஷோ , நீங்கள் எப்பொழுதாவது தவறு செய்திருக்கிறீர்களா ?

தினசரி அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன் . உங்களுக்குப் பதில் அளிப்பதன் மூலம் ! "

ஓஷோ , நீங்கள் சமகாலத்து மிக முக்கியமானவராக யாரைக் கருதுகிறீர்கள் ?

 ஜெ . கிருஷ்ணமூர்த்தி ! "

ஓஷோ , மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை அவசியமா ? அவனிடம் அன்பு , கருணை, உதவி செய்யும் மனப்பாங்கு இருந்தால் போதாதா ?

நீங்களே கடவுளாக இருக்கும்பொழுது எதற்கு வீணாக நம்பிக்கை ! உங்களை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் போதும் . நம்பிக்கை மதவாதிகளுக்கு உரியது ! "

 ஓஷோ , நீங்கள் நடக்கும் பொழுது உங்கள் பாதங்கள் தரையில் படுவதில்லை என்று என் நண்பன் கூறுகிறான் . இது உண்மையா ?

ஆமாம் . உண்மைதான் . நான் பெரும்பாலும் என் கால் செருப்பைக் கழற்றுவதே இல்லை ! "

 ஓஷோ , நீங்கள் உங்கள் சீடர்களுக்கு மாத்திரம் பேசுவது ஏன் ? பொதுமக்கள் அனைவருக்கும் பேசினால் என்ன ?

ஒரு அழகான ஜென் பொன்மொழிதான் என் பதில் ,
என் பாடல்களைப் பகிர்ந்துகொள்ளும் மனிதர்களிடம் நான் என் பாடல்களைப் பாடுகிறேன் . என்னை நன்கு அறிந்து கொண்டிருக்கும் நண்பனுடன் நான் என் மதுவை அருந்துகிறேன்,,,,,

-OSHO_Tamil

Comments