ஓஷோ, உங்களைத் தவறவிடாமல் இருக்க எது அவசியம்?
ஓஷோ, உங்களைத் தவறவிடாமல் இருக்க எது அவசியம்?
என்னைத் தவறவிடாமல் இருக்க ஒரே ஒரு விஷயம்தான் அவசியம். இந்த ஒரு விஷயத்தை நீ நினைவில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும், உண்மையைத் தேடி வரும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், "தான்" என்பது ஒரு மிகத்தந்திரமான ஒரு விளையாட்டை விளையாடுகிறது.
நான் உங்களுக்கு ஒரு கதை சொல்வேன்.
ஒரு பெரிய ஜென் குருவான போகோஜூ ஒவ்வொரு புதியவரையும் பார்த்து, "சீடனாக இருப்பது என்பதன் பாதை மிகவும் கடினமானாது என்று நீ அறிவாயா? நீ அந்தப் பாதையில் நுழையும் முன்னர், எல்லாச் சிரமங்கள், களைப்பூட்டும் விஷயங்கள்,பகைமைகள் இவற்றைப் பற்றி உனக்குச் சொல்வது எனது கடமையாகும்.இது மலையேறுவது போன்ற கடினப்பணி, நீ அதற்குத் தயாரா? அல்லது சும்மா தெரிந்து கொள்ளவென்று இங்கு வந்திருக்கிறாயா" என்று கேட்பது வழக்கம்.
ஒரு புதியவர் அதற்குப் பதிலாக, "இல்லை. நான் உண்மையைத் தெரிந்து கொள்ளத்தான் இங்கே வந்திருக்கிறேன்.ஆனால் சீடனாக இருப்பது அத்தனை கடினம் என்றால், என்னை ஒரு குருவாக ஆக்கிவிட முடியுமா?"என்றாராம்.
இது ஒரு விநோதமான கதை.
ஆனால் அந்த ஒரு விஷயம்தான் நீங்கள் எனக்கு அருகே நெருங்கி வருவதிலிருந்து தடை செய்யக்கூடியது. தான் என்ற எண்ணத்திற்குள் எங்கோ இருக்கும்,ஒரு குருவாக வேண்டும் என்ற ஆசை.நீங்கள் பெரியதாக,மகத்தானதாக ஆக வேண்டும் என்ற விருப்பம்.
குரு என்பவர் நிலவைச் சுட்டிக்காட்டும் ஒருவிரல் மட்டுமே. ஒரு குருவாக ஆவதில் அக்கறை காட்டாதீர்கள்.உங்களால் நிலவாக ஆகமுடியும் போது, ஏன் விரலாக ஆக வேண்டும்?
குருவாக வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்கள்தான் குருவாக ஆகிறார்கள் என்பதும்,அந்த ஆசை உள்ளவர்கள் சீடன் என்ற அந்தஸ்திலிருந்துகூட விழுந்து விடுகிறார்கள் என்பதும்தான் வாழ்க்கையின் மர்மங்களில் ஒன்று.
--ஓஷோ--
-OSHO_Tamil
Comments
Post a Comment