சிந்தனைகள் எல்லாமே குப்பைதான். - OSHO
சிந்தனைகள் எல்லாமே குப்பைதான்.
உங்களுக்குள் உங்கள் மனமும்,
உங்கள் கடந்த காலமும் தங்கி இருக்கும் அந்த இடத்தில்தான்
உங்கள் தியானம் வந்து இறங்க வேண்டும்."
ஆகவே சிந்தனைகளை வெளியே தூக்கிப்போட்டுவிட்டு உங்கள் உள்ளிடத்தை சுத்தம் செய்வதுதான் முதல் வேலையாக இருக்கட்டும்.
நல்ல சிந்தனைகளை வைத்துக்கொண்டு கெட்ட சிந்தனைகளை மட்டும் தூக்கிப்போட
முயற்சிக்கக்கூடாது.
"ஒரு தியானிக்கு எல்லாச் சிந்தனைகளும் குப்பையே.இதில்
நல்லது கெட்டது என்பதே இல்லை."
இவை இரண்டுமே உங்கள் உள்ளே
இடத்தை அடைத்துக் கொண்டுள்ளன.
இவை அங்கு உள்ளதால் உங்கள்
உள்ளாழ மெய்யிருப்பு முழுவதுமாக
மௌனத்தை அடைவதில்லை.
"ஆகவே,நல்ல சிந்தனைகளும்
கெட்ட சிந்தனைகளுக்கு ஈடாக கெட்டவையே."
ஆகவே இரண்டுக்கும் இடையே வேறுபாடு காணவேண்டாம்.
"இரண்டையும் ஒரே வீச்சில் வெளியே தூக்கிப் போட்டுவிடுங்கள்."
--ஓஷோ--
-OSHO_Tamil
Comments
Post a Comment