Google

நீங்கள் ஒரு பெண்ணின் அல்லது ஆணின் அழகை ரசிக்காவிட்டால் - OSHO



நீங்கள் ஒரு பெண்ணின் அல்லது ஆணின் அழகை ரசிக்காவிட்டால்

நான் அறிந்த வரையில்,நீங்கள் வெளி உலகை ரசிக்கத் தெரியாவிட்டால், உங்கள் உள் உலகத்தில் உள்ளதை ரசிக்கக் கூடிய தகுதியை இழந்து விடுகிறீர்கள்.

ஏனெனில், உங்கள் உள் உலகம் என்பது மிக ஆழத்தில் இயங்குவது.உங்களுடைய வெளி உலகம், உங்களுக்குள் மிக அருகில் உள்ளது.

நான், ஒரு ஆழமான சமநிலையை எப்பொழுதும் ஆதரிப்பவன்.வெளிஉலக அழகை ரசியுங்கள்.அந்த உணர்வு நீங்கள் தியானத்தில் ஆழமாகச் செல்ல மிகவும் உதவி செய்யும்.

அது உங்களை வேறு வகையில் அழைத்துச் சென்று ஈடுபடுத்தாது.

நீங்கள் எப்பொழுது வெளிஉலக உணர்வுகளுக்குத் தடை போடுகிறீர்களோ, அப்பொழுதே அது உங்களை அது இஷ்டப்படி இழுத்துச் சென்று, அதில் உங்களை மூழ்கடித்து விடும்.

நீங்கள் ஒரு பெண்ணின் அல்லது ஆணின் அழகை ரசிக்காவிட்டால், நீங்கள் கண்களை தியானத்தில் ஈடுபடும்பொழுது, உங்களைச் சுற்றி அந்த பெண்களும் அல்லது ஆண்களும்தான் இருப்பார்கள்.!

இது நீங்கள் ஏற்படுத்திய தடையினால் மற்றும் அடக்குதலினால் ஏற்பட்ட விளைவு.

அப்பொழுது,நீங்கள் உள்ளே உள்ளே ஆழமாகச் செல்லும் பொழுது, இவைகள் அனைத்தும் மேலே மிதந்து விடும்.

ஏனெனில், நீங்கள் வெளி உலக உயிர்த்தன்மையின் பரிணாமத்தைப் பொறுப்புடன் அறிந்து கொண்டு, உங்கள் மனதைத் திருப்திப் படுத்தவில்லை.

ஆகவே, உங்கள் உள் உலக தெய்வீக நிலையை அடைவதற்கு, நீங்கள் தகுதி படைத்தவராகவில்லை.

நான் உங்களுக்கு போதிப்பது என்னவென்றால்,நீங்கள் இந்த உலகத்தை நேசியுங்கள்.இதைத் துறந்து ஓடாதீர்கள்.

ஏனென்றால், உங்களை அறிய இதைத்தவிர வேறு வழியில்லை.நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி அல்லது அங்கம்.

நீங்கள் அதிலிருந்து எப்படி, எங்கே தப்பித்துச் செல்வீர்கள்?

எல்லாவற்றையும் துறந்துவிடுவது என்பது பொய். அவைகள் அனைத்தும் உண்மைக்கு மாறானது.அவைகள் பொய்மையைத்தான் தூண்டும்.

--Oஷோ--
OSHO

Comments