உங்கள் தியானத்தை மனதால் புரிந்து கொள்ள முடியாது.- OSHO
உங்கள் தியானத்தை மனதால் புரிந்து கொள்ள முடியாது.
மனம் இல்லாமல் போவதற்கு மனமே உதவ முடியும்.
மனம் இல்லாமல் போகும் போது வெறும் உணர்வு நிலை மட்டுமே மிஞ்சும்.
மனம் என்பது கிடையாது மன ஓட்டம் தான் உண்டு.
மனதால் எதையும் கவனிக்க முடியாது அதனால் நினைத்துப் பார்க்கத் தான் முடியும்.
உங்கள் மனதால் எது நல்லது எது கெட்டது என்று அறிய முடியாது.
மனம் என்பது எண்ணங்களால் நிரப்பப் பட்டுள்ள ஒரு வெற்றிடம் தான்.
ஆழமான அன்பில் மனம் நின்று விடுகிறது.
நீ உன்னுடைய மனதின் மூலமாகவே இந்த உலகத்தைப் பார்க்கிறாய்.
மனமற்ற நிலையே பைரவரின் நிலை.
நீ தனியாக இருக்கும் போது கூட
உன்னுடைய மனதில் ஒரு கூட்டத்தோடு தான் இருக்கிறாய்.
நீ உன்னுடைய மூச்சை ஒரு கணம் நிறுத்தினால்,
திடீரென்று உன் மனமும் நின்று விடும்.
இசையை ரசிப்பதற்கு மனம் தேவையில்லை.
தியானத்தின் மூலம் உன்னுள் இருக்கும் மனமற்ற நிலையைத் தொடு.
நீ மனதைக் கடந்து விட்டால் எல்லாம் ஒன்றுதான்.
மனம் பேராசையின் அடிப்படையிலேயே இயங்கும்.
மனம் எப்போதும் பயனைப் பற்றியே நினைத்து ஏங்கும்.
மனம் என்பது உடலுக்கும் ஆன்மா வுக்கும் நீண்டு கிடக்கும் கயிறு போன்றது.
மனம் பூரண ஓய்வு நிலையில் சலனமற்று இருக்கும் போது கடவுட் தன்மை தானே உண்டாகும்.
மனம் இயங்குவதை ஒரு சாட்சியாக நின்று பாருங்கள்
மனதிற்கு தான் வார்த்தைகள் தேவை உள்ளத்திற்கு வார்த்தைகள் தேவை இல்லை.
உங்கள் எண்ணங்களின் குவியல் தான் மனம்.
மனம் செயல்படும் போது ஆணவம் பிறக்கிறது.
மனமற்ற நிலையைத் தான் புத்தர் தூய மனம் என்கிறார்
--ஓஷோ--
-OSHO_Tamil

Comments
Post a Comment