முட்டாள் அறிவாளியான கதை.(Must Read) - OSHO
முட்டாள் அறிவாளியான கதை.(Must Read)
அந்த ஊரில் ஒரு இளைஞன் இருந்தான் .அவனை எல்லோரும் முட்டாள் என்றே அழைத்து ஏழனம் செய்து வந்தனர்.அவன் ஒரு நாள் ஒரு பிரபல துறவியை கண்டான் .அவன் துறவியிடம் சென்று"ஐயா என்னை எல்லோரும் முட்டாள் என்றே கூறுகின்றனர் நான் எப்படி அறிவாளியாவது "என்று கேட்டான்.அதற்கு துறவி ஒரு ரகசிய ஆலோசனை வழங்கினார்.
அதன்படி காலை எழுந்தவுடன் அந்த இளைஞன் மக்கள் கூடும் கடைவீதிக்கு சென்றான்.. அங்கே ஒரு நண்பன் மயில் தோகை விறிக்கிறது மழை வரும் என்றான்.அதற்கு இளைஞன் மழை வருவதால் தான் மயில்தோகை விறிக்கிறது என்றான்.இன்னொருவ நண்பன் கோயிலுக்கு சென்றால் கடவுளை பார்க்கலாம் என்றான் .அதற்கு இளைஞன் கஷ்டமான நேரத்திற்கு உதவுபவர்கள் தான் கடவுள் என்றான்.அங்கே ஒரு பெரியவர் அந்த நதி அழகு என்றார்.அதற்கு இளைஞன் நதி அழகல்ல அதில் ஓடும் தண்ணீர் தான் அழகு என்றான்..யார் சொல்வதையும் ஏற்றுகொள்ளாமல் தர்கம் செய்து கொண்டிருந்தான்.
மக்கள் குழம்பிபோனார்கள்.என்ன ஆச்சு திடீரென இப்படி ஆயிட்டானே என பேசிக்கொண்டனர்.இளைஞன் வீட்டிற்கு சென்றான் அங்கே அவன் அம்மா ஒரு அழகிய பெண்ணை காட்டி" டேய் இந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோடா" என்றார்.அதற்கு இளைஞன் ‘’இந்த பெண் அவலட்சனமாக இருக்கிறாள் எனக்கு இவள் வேண்டாம்’’ என்றான்.
மறு நாள் காலை அவன் வழக்கம்போல் கடைவீதிக்கு சென்றான். மக்கள் எல்லோரும் அவனை அறிவாளி என மரியாதையோடு நடத்தினர்.அவன் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது என்றனர்.
துறவி சொன்ன ஆலோசனை இது தான்."நீ யார் எது சொன்னாலும் எதிர்த்து பேசு, மறுதலித்து பேசு.எதிர்மறையாக பேசு.எதையும் ஏற்றுகொள்ளாதே.அவர்கள் சொல்வதிலுள்ள குறைகளை கண்டுபிடி. வாதம் செய்" என்பது தான். இப்போதுள்ள நிறைய பேர் இந்த போர்வையில் தான் வாழ்ந்து வருகின்றனர்..
-OSHO_Tamil

Comments
Post a Comment