சூபி ஞானம் :- இறை நிலை (பகுதி 3)
சூபி ஞானம் :-
இறை நிலை
பகுதி 3:
ஞானிகளின் பார்வையில் இறை நிலை மறு பட்ட கோனத்தில் நோக்கபடுகிறது சிலை வணக்கம் இணை வைத்தல் என்றால் ஒரு சொல்லால் இறைவனை மட்டு படுத்தி அழைப்பதும் இணை வைத்தல் தான் இரண்டும் மாறு பட்ட கோணமாக இருந்தாலும் ஒரே அமைப்பை கொண்டவைதான் என்று சூபி ஞானிகள் கருதுகிறார்கள் சிலை இறைவனை நினவு படுத்தும் என்று சிலை வணங்குபவர்கள் சொல்வதும் அஸ்மா அல்லது நாமம் அவனை நினவு படுத்தும் என்பதுளிலும் என்ன வித்தியாசம் இருக்கிறது சிலையும் சிருஸ்டிதான் பெயர்களும் சிருஸ்டிதான் என சூபிகள் கருதுகிறார்கள்.
இறை நிலை பற்றி பாகு படுத்தி கொள்வது சித்தாந்தங்கள் அல்ல சித்தாந்திகளே அவற்றை வேறு படுத்தி கொள்கிறார்கள் அனால் சூபிகளோ இதற்கு அப்பால் பட்டு வேறு ஒரு கோணத்தில் இதை பார்கிறார்கள். சித்தாந்த வாதிகள் தமது விருப்பங்களைஎல்லாம் கடவுளின் விருப்பமாக திணிப்பதே பிரிவுக்கு கரணம் என சூபிகள் கருதுகிறார்கள்எந்த இடத்திலும் இறைவன் இப்படி பட்டவன் என்றோ அவனை அடையும் மார்க்கம் இது மட்டும்தான் என்றோ எங்கும் குறிப்பிட வில்லை மாறாக எல்லா பாதைகளும் அவனில்தான் அல்லது இறை நிலையில்தான் முடிவடையும் என கருது கிறார்கள்ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமனத்தில் விருந்துக்கும் பந்தலுக்கும் அலங்காரங்களுக்குமே முக்கியத்துவம் கொடுக்க படுகின்றன ஆனால் அதன் உள் நோக்கமோ இரண்டு மனங்கள் இணைவதே இதற்கு அங்கு முக்கியத்துவம் அளிக்க படுவதில்லை.ஆனால் சூபிகளின் பார்வையோ இதற்கு மாறுபடுகிறது அவர்கள் ஐக்கியத்திற்கே முக்கியத்துவம் கொடுகிறார்கள் அதனால் தான் அவர்கள் புற அலங்காரங்களை கவனிப்பது இல்லை ஏகத்தின்மைய புள்ளியாக தம்மை தியானிக்கும் இவர்களின் இறை நம்பிக்கையை சாமான்யர்களால் சிந்திக்க கூட முடியாத விசயமாகும்.இறை தன்மை ஒன்றோ இரண்டோ அல்லது பலதோ அல்லாமல் அது ஏகம் என்றும் சிருஷ்டிகளில் நேர் எதிராக தோன்றும் தன்மையை அதன் விரோதிக்கும் தன்மையை சமநிலை படுத்தும் போது அது அதுவாகவே இருக்கும் என கருதுகிரார்களால்.இவர்கள் தமது கருத்தையோ முறைகளையோ யாருக்கும் உபதேசிப்பதோ திணிப்பதோ இல்லை .சூபிகளின் பார்வையில் " இறை நிலை" "ஐக்கியம்" எனும் ஐக்கிய பாடாகவே கருத படுகிறது.

Comments
Post a Comment