Google

உன் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது.- OSHO



உன் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது.

நீ ஏன் அதனுடன் சுற்றுகிறாய்?

உடலுக்கும் மனதிற்குப் பின்னால்
என்ன இருக்கிறதென்று பார்

அது என்றும் சுழல்வதே இல்லை
அது தான் நீ " தத்வம்ஸி "

அலைகள் கடலின் மேல் பாகத்தில்தான்
அடியாழத்தில் என்ன இருக்கும்?

கடலை அலையாக நினைப்பது
பெரும் தவறு. உணர்வாய்.

மாட்டு வண்டிச் சக்கரத்தை கவனி.
சக்கரம் சுழல்கிறது. அச்சு சுழல்வதில்லை.
நீ அச்சாணி. உணர்ந்து கொள்.

எல்லா மாற்றங்களும் அப்பால்
மாறாததை சந்திக்க தயாராக இரு.

ஓஷோ,,,
-OSHO_Tamil

Comments