சூபி ஞானம் :- இயல்பு (பகுதி 1)
சூபி ஞானம் :- "
இயல்பு:
பகுதி 1:
இயல்பாக இருத்தலை ஆதாரமாக கொள்கிறது. எந்த நிலையிலும் ஆர்பரிக்கமலும்,சூழ் நிலைகளால் பாதிக்க படாமலும், எந்த சூழலையும் பாதிக்காமலும், தாக்கத்தை உண்டாக்காமலும்,இயல்பு நிலையில் இருக்கும் தன்மையையே! அதன் இயல்பு போக்கில் புரியப்படுகிறது.இஸ்லாமிய கலாச்சாரத்தின் தாக்கத்தால் இயல்பாக இருக்கும்இந்த ஞானிகளுக்கு சூட்டிய பெயரே " சூபி " ஆனால் எந்த இயல்பு ஞாநியியும் தம்மை சூபி என்று அழைத்து கொள்ள வில்லை .இப்படி அழைக்க பட்ட இந்த இயல்பு ஞாணிகள் தம் அகத்தே, சட்ட திட்டம், அடையாளம், சீருடை, இயற்ற பட்ட வணக்க வளி முறை, இப்படி எதையுமே தமது அடையாளமாகி கொள்ள வில்லை காலத்தின் ஓட்டத்தோடு இணைந்து இருந்த இந்த இயல்பு நிலை இன்றும் அதே போக்கில் வளைந்து நெளிந்து நெகிழ்வு தன்மையுடன் எதிலும் சிக்காமல் போய் கொண்டே இருக்கிறது .இது போன்ற ஒரு இயல்பு நிலை சீன கலாச்சரதில் தாஓ என்று அறிய படுகிறது ஜென் தத்துவங்களும் ஜைன தத்துவங்களும் இந்த இயல்பு நிலையை பேணும் இயல்புகளாகவே இருந்தது. மேலும் மகாவீர், புத்தர், சங்கர், இவர்கள் துறவிகளாக இருந்தாலும் இந்த இயல்பு நிலையை பேணியவர்களாகவே கருத படுகிறார்கள் .மேலும் சூபி ஞானி மீரான் சாகிப் வலியுல்லா அவர்களும் இந்த இயல்பு முறையில் இருந்தாலும் துறவறத்தை மேற்கொண்டதாகவே வரலாறுகள் கூறுகின்றான.ஆகவே இந்த இயல்பு நிலை; முழு உலகிலும் அடையாளம் இல்லாத ஒரு தாக்கத்தை, சிந்தனை தாகத்தை, பொதுவானதாக பேணி காத்து வந்து இருக்கிறது என்பது தெளிவு.இந்த வழியில் பரி நிர்வாணம் என்று புத்தரும்,, அத்வைத நிலை என்று சங்கரும், கைவல்யம் பேறு என்று மகாவீரும் குறிப்பிட்ட அந்த இறுதி நிலையை;
இயல்பின் உச்சத்தை அடைந்து தனக்குள் தான் அழிந்து நானே மெய்பொருள் என்று கூறிய மன்சூர் ஹல்லாஜ் அவர்கள் சரித்திரத்தில் முக்கிய இடத்தை சிந்தனைக்கு விட்டு சென்று இருக்கிறார்கள்.உலகம் முழுவதும் உள்ள ஆராட்சியாளர்கள், வாழ்வு முறையை இரண்டாக விபரிகின்றனர்.ஆன்மிகம் என்றும் மதம் என்றும் பிரிக்கின்றனர்,அதில் மதம் சட்ட திட்டங்களையும்,கலாச்சாரங்களையும், சடங்கு சம்பிரதாயங்களையும், நிறுவுவதால் பிரிவினை துவேசம் யுத்தம் அமைதி இன்மை க்கு காரணமாக இருப்பதாகவும்; ஆனால் எல்லா மதனக்ளின் உட்பிரிவான ஆத்மீகம் இவை எதுவுமற்ற இயல்புடன் ஒன்றிபோகும் ஏகாந்தமகவும், முட்டி மோதிக்கொள்ளும் சடத்துவ அமைப்பற்ற சூட்சும இயல்பு நிலை என்றும் விபரிகின்றனர்.
இதற்கு எல்லை களோ தடைகளோ இல்லை என்பது இந்த ஒட்டு மொத்த ஆய்வாளர்களின் கருத்தாகும்.இந்த இயல்பு நிலை ஞானிகள் தமக்கு என எதையும் உரிமை படுத்தி கொள்வதில்லை, அவர்களின் செயலகளில் அவர்களுக்கு உரியன யாவும் நடக்கிறது , அவர்கள் எப்போதும் சிஷ்யர்களை ஏற்பது இல்லை புடை சூழ சிஷ்யர்கலையோ கூட்டத்தையோ விரும்புவதும் இல்லை வளி தேடி வருபவர்களுக்கு வழியை காட்டி விட்டு தம் போக்கில் போய் கொண்டே இருந்தார்கள்.இந்த இயல்பு ஞானிகளின் இன்னுமொரு சிறப்பம்சம் மூன்று வகையாக ஆய்வுக்கு உட்படுத்தபடுகிறது. முதலாவது உலக அமைப்பை உதறி தள்ளுவது இது ஜைன துறவிகளின் அமைப்பாகும். இரண்டாவது உலக அமைப்பை உணர்ந்து அதில் இருந்து விடுபடுவது இது பௌத்த துறவிகளின் அமைப்பாகும். மூன்றாவதுதம்மில் நடை பெரும் எந்த செயலுக்கும் பொறுப்பு இல்லாமல் நடப்பதை எல்லாம் ஏற்று கொண்டு உள் உணர்வில் வேற்றுமை இல்லாமல் இருக்கும் ஞானிகளாகும். இவர்களுக்கு உண்ணல் குடித்தல் திருமணம் செய்தல் வியாபாரம் செய்தல் எல்லா வற்றுக்கும் இடம் கொடுத்து கொண்டு எதிலும் ஆட்படாமல் தாமரை இலை மேல் நீர் துளி போல் தம்மை பேணியவர்கலாகும். இது இஸ்லாமிய தாக்கத்தில் நபிகளாரின் முறையை அறிந்து அவர்கள் வளி நடப்பதாகும் இந்த இயல்பு ஞானிகள் சூபி ஞானிகள் என்று அறிய பட்டார்கள் .
அனால் இதன் முக்கிய கருத்து இப்போது ஆய்வுக்கு உள்ளாக்க படுகிறது, அதாவது இதில் எது உண்மை எது மெய் நிலையை கொடுக்கும். இதற்கு பதில் அவரவர் மனநிலைக்கே விட படுகிறது யார் எதை தேர்வு செய்கிறாரோ அதுவே அவரின் பாதையாகும்.உருவாகும் நதி எல்லாம் ஒரு நாள் சமுத்திரத்தை அடைந்தே தீரும் இயல்பு ஞானிகள், வாழ்வை பற்றியும் கவலை படுவதில்லை, மரணத்தை பற்றியும் கவலை படுவதில்லை, அதன் பின் வரும் வாழ்கையை பற்றியும் சிந்திப்பது இல்லை, அவர்கள் நிலையெல்லாம் இயல்பை இயல்பாக ஏற்று கொள்வதே அவர்களே இஸ்லாமிய கலாச்சாரத்தில் சூபிகள் என்று அறிய படுகிறார்கள் . ஆனால் அவர்களை இப்படி அளைப்பது அவர்களுக்கே தெரியாது.இயல்பு என்பது ஏகத்தின் இருப்பே ஆகவே இவர்களின் பெயரை சூபி என்பதை மாற்றி ஏக ஞானிகள் என்று பெயர் வைத்தாலும் இவர்கள் அதை கண்டு கொள்ள போவதில்லை.
(தொடரும்)

Comments
Post a Comment