Google

தியானத்தில் நீங்கள் அறியாத நிலையில் மனமற்ற நிலையில் இருகின்றீர்கள் - OSHO



🌷தியானத்தில் நீங்கள் அறியாத நிலையில் மனமற்ற நிலையில் இருகின்றீர்கள்

அந்த நிலையில் நீங்கள் செய்வது அனைத்தும் சரியாகவே இருக்கும்

அப்பொழுது நீங்கள் செயலாற்ற வில்லை

கடவுள் தான் செயலாற்றுகிறார்

நீங்கள் கணத்துக்கு கணம் செயல்படுவதை உற்று நோக்குங்கள்

நாளையைப் பற்றி இன்றே நினைக்க வேண்டாம்

இப்பொழுது இந்தக் கணத்தில் இங்கே இருங்கள்

இந்தக் கணம் இயல்பாக முழுமையாக இருந்தால்

அடுத்த கணமும் இயல்பாக முழுமையாக இயங்கும்

அந்த தருணம் வரட்டும் அது நிகழட்டும்

அப்பொழுது நீங்கள் அங்கே முழுமையாக இருக்கிறீர்கள்

பிறகு உங்களிடமிருந்து நடக்கும் செயல்கள் அனைத்தும்

சரியானதாகவும் புனிதமானதாகவும் அமையும்

உங்களிடம் பிரக்ஞை
தன்மை இருந்தால் ஒழுங்கு முறை தானே ஏற்படும்

ஒரு முழுமையான அனுபவம்தான் நீங்கள் அதை விட்டு தாண்டிச் செல்ல உதவும்

அனுபவத்தின் வாயிலாகத்தான் முதிர்ச்சி வர வேண்டும்

ஞானமடைதல் என்பது முடிவான வாழ்வின் முதிர்ச்சி

அதற்கு அப்பால் எதுவும் இல்லை

வாழ்க்கையை வாழ்ந்து அனுபவப் படாமல் நீங்கள் ஞானமடைய முடியாது 🌷

🌷 ஓஷோ
சிறகுகள் இன்றி பற
Fly without wings 🌷
-OSHO_Tamil

Comments