மனநிலை நிர்வாகம் - "ஆம் என்ற அந்த மந்திரம்" ( பகுதி-12 )
6.12.ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்”.
அத்தியாயம் – 6- மனநிலை நிர்வாகம்
பகுதி-12 ஆம் என்ற அந்த மந்திரம்.
.
வாழ்க்கைக்கு, மக்களுக்கு, அன்புக்கு நீங்கள் ஆமாம் என்று சொல்ல நான் உங்களுக்கு கற்றுக்கொடுக்கிறேன். ஆம், அங்கே முட்கள் இருக்கிறது, ஆனால் அதை எண்ணிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அதை புறக்கணியுங்கள்; ரோஜாவில் தியானம் செய்யுங்கள். அந்த தியானம் ரோஜாவிற்குள் ஆழமாக சென்றால், அந்த ரோஜா உங்களுக்குள் ஆழமாக சென்றால், முட்கள் அது இருப்பதை விட சின்னதாக ஆகிவிடும். ரோஜா உங்களை முழுமையாக ஆட்கொண்டு விட்டால் பின் இந்த உலகத்தில் முட்களே இல்லாமல் போகும்.
.
உங்கள் சக்தியை `ஆம்’ என்று சொல்வதில் செலவிட ஆரம்பியுங்கள். `ஆம்’ என்கிற மந்திரத்தை உருவாக்குங்கள். ஒவ்வொரு இரவும் நீங்கள் தூங்கச் செல்லுமுன், திரும்ப திரும்ப `ஆம்’ `ஆம்’ என்று சொல்லுங்கள். அதனுடன் லயம் கொண்டு விடுங்கள். அதனுடன் இசைவு கொள்ளுங்கள். அது உங்கள் இருத்தலில் கிளம்பி காலிலிருந்து தலை வரை வரட்டும். அது உங்களை ஊடுருவட்டும், திரும்ப திரும்ப `ஆம்.. ஆம்.. ஆம் எனக் கூறுங்கள். ‘அது இரவில் பத்துநிமிடம் உங்கள் பிரார்த்தனையாக இருக்கட்டும். பிறகு தூங்கச்செல்லுங்கள்.
.
அதிகாலையில், மறுபடியும் குறைந்தபட்சம் ஒரு மூன்று நிமிடங்கள், படுக்கையில் அமர்ந்து செய்யுங்கள். முதலில் செய்ய வேண்டிய விஷயம், திரும்ப திரும்ப `ஆம்’ என சொல்லுதல். பிறகு அந்த உணர்விற்கு செல்லுங்கள்.
.
நாள்பொழுதில், நீங்கள் எப்பொதெல்லாம் எதிர்மறையாக உணர்கிறீர்களோ, சாலையில் நின்றுவிடுங்கள். எங்கு வேண்டுமானாலும். நீங்கள் உரக்க சொல்ல முடியுமானால் `ஆம்’….,’’ நல்லது, இல்லையென்றால், குறைந்தபட்சம் நீங்கள் மெளனமாகச் சொல்லலாம் ``ஆம்’’… ``ஆம்’’ மூன்று வாரங்களுக்கு இந்த ``ஆம்’ என்கிற பயிற்சியை செய்யலாம்.
.
சோகமாக இருக்காதீர்கள், கோபம் கொள்ளுங்கள்.
.
கோபம் சோகம் இரண்டுமே ஒன்றுதான்… சோகம் என்பது வெளிக்காட்டப்படாத கோபம். கோபம் என்பது வெளிப்படும் சோகம். ஒரு சோகமான மனிதருக்கு கோபப்படுவது கடினம். நீங்கள் ஒரு சோகமான மனிதரை கோபப்படச் செய்தால், அவருடைய சோகம் மறைந்து விடும். ஒரு கோபமான மனிதரால் சோகப்படுவது கடினம். அவரை நீங்கள் சோகப்படுத்தினால் அவருடைய கோபம் மறைந்துவிடும்.
.
நம்முடைய எல்லாஉணர்ச்சிகளிலும் இந்த அடிப்படை எதிர்மறை என்பது தொடர்கிறது – ஆண், பெண்,. ஆண்பால், பெண்பால். யின்-யாங். கோபம் என்பது ஆண், சோகம் என்பது பெண். அதனால் நீங்கள் சோகமாகிவிட்டால், கோபத்துக்கு மாறுவது என்பது கடினம், ஆனால் நீங்கள் அதை செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்த உணர்வை வெளிப்படுத்துங்கள், அதை செயல் படுத்துங்கள். அது முட்டாள்தனமாக இருந்தால்கூட, உங்கள் பார்வைக்கே நீங்கள் கோமாளியாக தெரிந்தால்கூட அப்போதுகூட, அதை வெளிக் கொண்டுவாருங்கள்.
.
நீங்கள் கோபத்திற்கும் சோகத்திற்குமிடையே சஞ்சரிக்க முடிந்தால், இரண்டுமே சரிசமமாக சுலபம்தான்.. நீங்கள் அவற்றை கடந்து போக வேண்டும், அப்போது உங்களால் அதை கவனிக்க முடியும். நீங்கள் திரைக்கு பின்னாலிருந்தபடி இந்த விளையாட்டுகளை கவனிக்கமுடியும். பிறகு நீங்கள் இரண்டையும் கடந்து போகமுடியும். ஆனால் முதலில் நீங்கள் இந்த இரண்டுக்கும் நடுவே சுலபமாக நகர வேண்டும்: இல்லையென்றால் நீங்கள் சோகமாகவே இருப்பீர்கள் – ஒருவர் கனமாக இருக்கும்போது கடந்துபோவது என்பது கடினம்.
.
நினைவில் கொள்ளுங்கள், இரண்டு சக்திகள், எதிரெதிர்சக்திகள், இரண்டும் ஒரேஅளவு இருக்கும்போது, 50-50, பிறகு அதிலிருந்து வெளிவருவது சுலபம். காரணம் அவைகள் போராடிக் கொண்டு ஒருவரையொருவர் எதிர்த்து கொண்டிருக்கும்போது நீங்கள் யார்பிடியிலும் இல்லை. உங்கள் சோகம், கோபம் இரண்டுமே பாதிபாதி. சமமான சக்திகள், அதனால் பரஸ்பரம் சக்தியிழந்து விடுகிறார்கள். திடீரென்று உங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும், நீங்கள் நழுவி விடலாம். ஆனால் சோகம் 70 சதவீதமாகவும் கோபம் 30 சதவீதமாகவும் இருந்தால், அப்போது அது மிகவும் கடினம். முப்பது சதவீத கோபம் என்பது 70 சதவிகித சோகத்திற்கு முரணானது. அதாவது இன்னும் 40 சதவீத சோகம் இன்னும் அங்கே இருக்கிறது, அப்போது நழுவுவது சாத்தியமில்லை. உங்களால் சுலபமாக நழுவ முடியாது. இந்த 40 சதவீதம் தொங்கிக் கொண்டிருக்கும்.
.
ஆகவே இதுதான் உள்சக்திகளின் அடிப்படைவிதிகளில் ஒன்று – எதிரெதிர் விஷயங்களை ஒரேதரத்தில் கொண்டுவந்தால் பிறகு நீங்கள் நழுவ முடியும். அது ஏதோ இரண்டுபேர் சண்டைபோடுகிறார்கள், நீங்கள் தப்பிவிடுகிறீர்கள். அவர்களுக்குள் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் தப்பி விடலாம்.
.
மனதை உள்ளே கொண்டு வராதீர்கள். அதை ஒரு பயிற்சியாக செய்யுங்கள். அதை நீங்கள் ஒரு தினசரி பயிற்சியாக செய்யலாம்.; அது வரும் வரை காத்திருக்க வேண்டுமென்பதை மறந்துவிடுங்கள். தினமும் நீங்கள் கோபப்படவேண்டும் – அது சுலபம். அதனால் குதியுங்கள், ஓடுங்கள், கத்துங்கள், அதை வெளியே கொண்டு வாருங்கள். ஒருமுறை நீங்கள் எந்த காரணமும் இல்லாமல் அதை வெளியே கொண்டு வந்து விட்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், காரணம் இப்போது உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. இல்லையென்றால், கோபம் கூட சூழ்நிலையால் ஆளப்படுகிறது: நீங்கள் அதன் எஜமானரல்ல. நீங்கள் வெளியே கொண்டு வர முடியாவிட்டால், நீங்கள் எப்படி அதை விடமுடியும் ?
.
துவக்கத்தில் அது மடத்தனமாக வினோதமாக நம்பமுடியாதது போல தெரியும், காரணம் நீங்கள் எப்போதுமே வேறு யாருடைய அவமரியாதையே உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நம்பியிருக்கிறீர்கள். அது உங்களுடைய கருத்து. அது உண்மையல்ல. கோபம் எப்போதுமே உள்ளே இருக்கிறது: யாரோ ஒருவர் அது வெளிவர காரணமாக இருந்திருக்கிறார்.
.
நீங்கள் உங்களுக்கே ஒரு காரணம் சொல்லிக்கொள்ளலாம்: நீங்கள் கோபப்பட்டிருக்கலாம், அல்லது கோபம் வரப்போகிறது என்கிற ஒரு சூழலை கற்பனை செய்துகொள்ளுங்கள். சுவற்றோடு பேசி, விஷயங்களை சொல்லுங்கள், விரைவில் அந்தசுவர் உங்களோடு பேசும். முற்றிலும் கிறுக்கத்தனமாக நடங்கள். நீங்கள் கோபத்தையும், சோகத்தையும் ஒரேதரத்திற்கு கொண்டு வரவேண்டும், இரண்டும் ஒன்றுக்கொன்று சரியானஅளவில் இருக்கவேண்டும். அவை ஒன்றுகொன்று எதிர் கொள்ளும், நீங்கள் நழுவி விடலாம்.
.
இதை ஜார்ஜ் குருட்ஜிஃப் தந்திரமனிதனின் வழி என்று அழைப்பார் – உள்சக்திகளை இப்படி ஒரு மோதலுக்கு கொண்டுவருவதன் மூலம் அவைகள் இரண்டும், ஒருவரை ஒருவர் எதிர் செய்து கொள்கிறார்கள். நீங்கள் தப்புவதற்கு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது.
.
-தொடரும்.

Comments
Post a Comment