Google

மெய்யிருப்பே உங்களுடைய முடிவாக இருக்க வேண்டும் - OSHO



மெய்யிருப்பே உங்களுடைய முடிவாக இருக்க வேண்டும்...அதன் பிறகு ஒன்றுமே இல்லை.

அதுதான் உங்களுள் இருக்கும் கடவுளின் பகுதி.

அது உங்களுக்கு உங்களுடைய மனமோ இதயமோ கொடுக்க முடியாததைக் கொடுக்கும்.

அது உங்களுக்கு மௌனத்தை அளிக்கும்.

அமைதியைக் கொடுக்கும்.

உங்களிடம் சாந்த மிளிர்வு ஏற்பட வைக்கும்;பேருவகையைத் தரும்-முடிவாக நீங்கள் நிலைபேறுடைய மெய்யிருப்பாய் இருப்பதை உணர வைக்கும்.

மெய்யிருப்பாய் இருப்பதை உணர வைக்கும்.

மெய்யிருப்பைத் தெரிந்து கொண்டதும் மரணம் ஒரு கட்டுக்கதையாகி விடும்.

வாழ்வு நித்தியத்தினுள் பறந்து செல்லும்.

ஒரு மனிதன் தன் மெய்யிருப்பை உணராத நிலையில் இருக்கும்போது அவன் உண்மையிலேயே உயிருடன் இருப்பதாகச் சொல்ல முடியாது.

அவன் உபயோகமுள்ள ஒரு இயந்திரக் கருவி போல் இருக்கலாம், அவ்வளவுதான்.!!

--ஓஷோ--

Comments