காதலில் செலவாளியாக இருங்கள். - OSHO
7.7.ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்”.
அத்தியாயம் – 7- பாலியலும் அதன் தொடர்பானதும்
பகுதி-7 காதலில் செலவாளியாக இருங்கள்.
.
சக்தி மேல்நோக்கி எழும்போது, காமசக்தி நிலைமாற்றமடைந்து அதன் தரம் மாறுகிறது. பிறகு காமத்திற்க்கான தேவை என்பது குறைந்து கொண்டே வரும். அன்பு கொள்வது என்பது மேலும், மேலும் அதிகமாகும். சக்தி கீழே போகும்போது காமம், சக்தி மேலே போகும்போது அது அன்பு.
.
ஆனால் காத்திருக்காதீர்கள். மேலும் மேலும் மனிதர்கள் மீது அன்பு செலுத்த ஆரம்பியுங்கள். அன்பு செலுத்துவதில் ஒரு செலவாளி ஆகிவிடுங்கள். நண்பர்களிடம் ஏன் முன்பின் தெரியாதவர்களிடம்கூட அன்பு செலுத்துபவராக இருங்கள். மரங்கள், பாறைகளிடம்கூட, அன்போடு இருங்கள்.
.
நீங்கள் ஒரு பாறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள், ஒருவர் தன் காதலியைத் தொடுவதைப்போல, நீங்கள் அந்த பாறையை ஆழ்ந்த அன்போடு தொடும்போது, பாறையிடமிருந்து பதில் கிடைப்பதை நீங்கள் உணரலாம். அதை ஏறக்குறைய நீங்கள் உடனடியாக உணரலாம் – அந்த பாறை பதில் சொல்வதாக உணரலாம், பாறை என்பது இனியும் பாறையல்ல. ஒரு மரத்தை ஆழ்ந்த அன்போடு தொடுங்கள், திடீரென்று அன்பு போவது மட்டுமல்ல வருகிறது என்பதையும் பார்ப்பீர்கள். நீங்கள் மட்டும் மரத்தை நேசிக்கவில்லை, அந்த மரமும் பதில் சொல்கிறது, திருப்பி அனுப்புகிறது என்பதை உணர்வீர்கள்.
.
நீங்கள் எதைச்செய்தாலும் அதை நேசித்தபடி செய்யுங்கள். நீங்கள் உணவருந்தினாலும், நேசத்தோடு சாப்பிடுங்கள்; உணவை அன்போடு சுவையுங்கள். குளியல் போடுகிறீர்களா, தலையில் விழும் நீருக்கு ஆழ்ந்த அன்போடு, நன்றியோடு, ஆழ்ந்தமரியாதையோடு வரவேற்பு கொடுங்கள் – காரணம் புனிதம் என்பது எங்குமிருக்கிறது, எல்லாமே புனிதம்தான். எல்லாமே புனிதம் என்பதை நீங்கள் உணரத் துவங்கினால், அன்புதாகம் உங்களுக்கு எடுக்காது, காரணம் அது எல்லா இடத்திலிருந்தும் கிடைக்கிறது.
.
-தொடரும்.
Comments
Post a Comment