Google

"மொகஞ்சாதாரோ" என்ற ஒரு அழிபாட்டுச் சின்னம் உள்ளது. - OSHO



🥀 "மொகஞ்சாதாரோ" என்ற ஒரு அழிபாட்டுச் சின்னம் உள்ளது.

இந்தியாவின் பழமை வாய்ந்த நகரம் அது.

ஒன்றன்கீழ் ஒன்றாக ஏழு அடுக்குகளாக புதையுண்ட நகரமது.

"ஏழு முறை இந்த நகரம் அழிக்கப்பட்டுள்ளது."

அதை அகழ்வு செய்யும்போது முதல் அடுக்கு நகரம் கண்ணில் படுகிறது.அதன் வயது 1000 ஆண்டுகள்.

"மொகஞ்சாதாரா" நகரம் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது என்று முடிவு கட்டும் முன்பாக மற்றொரு நகரம், அதனடியில்.

அதன் வயது 10,000 ஆண்டுகள்.

அகழ்வுபணி தொடர்கிறது.

பணியாளர்கள் அசந்து போய்விட்டனர். ஒன்றன்கீழ் ஒன்றாக ஏழு நகரங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.

அதன் கடைசி நகரம் ஆழத்தில் புதையுண்டு போய்விட்ட நகரம்.

20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரலாறு கூறுகிறது.

அங்கே அழகிய நாகரீகம், அற்புத சிலைகள்.

இப்போது அந்த நாகரீகம் மறைந்து விட்டது.

அவர்களுக்கே உரித்தான கடவுளர்கள் மறைந்து போயினர்.

மதங்கள் சுவடு தெரியாமல் போயின.

கிருத்துவர்கள் அழிகிறபோது கிருத்துவக் கடவுளும் அழிந்து போகின்றார்.

இந்துக்கள் அழிகிற போது இந்துக் கடவுளரும் அழிந்து விடுகின்றார்.

நான் என்ன கூற வருகிறேன் என்று புரியவில்லையா உங்களுக்கு...???

உருவக் கடவுள்கள் அனைத்துமே மனித மனதின் வெளிப்பாடு - நீட்சி.

வெளிப்பாட்டுக்குரிய சாதனமான மனிதன் இல்லை எனில் எந்தக் கடவுளும் மறைந்து போய்விடும்.

மனிதனின் சின்னஞ்சிறிய மூளையால் அளப்பரிய ஆற்றலுக்கு உருவம் தர இயலாது.

தனது மனதின் தன்மையை அப்படியே கடவுளின் மீது ஏற்றிக்கூறுவது மனிதனின் இயல்பாக உள்ளது 🥀

♥ ஓஷோ ♥

Comments