தெளிவும் அமைதியும் பெறுவது உங்கள் பிறப்புரிமை. - OSHO
தெளிவும் அமைதியும் பெறுவது உங்கள் பிறப்புரிமை. அப்படி அது இல்லாவிட்டால், அதன் பொருள்,நீங்கள் முயற்சி செய்து, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குணங்களை, உங்களிடம் ஒளிந்திருக்கும் அற்புதங்களைக் கண்டறிய முயலவில்லை என்பதே ஆகும்.
வீட்டிற்கு வெளியே,வாசல் வராந்தாவிலேயே நீங்கள் வாழ்கிறீர்கள்.வீட்டிற்குள் நுழையவே இல்லை.வீட்டினுள் இருக்கும் புதையல்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது.
மக்கள் தாங்கள் தொலைத்ததைப் பற்றி உணர்வதே இல்லை.ஏனெனில் தங்களைப் பற்றி அவர்கள் அக்கறைப் படுவதே இல்லை.
ரூணேயின் சட்டம் இது. "நீ எங்கே இருக்கிறாய் என்று அக்கறை இல்லையென்றால் நீ தொலையவே மாட்டாய்.!" எங்கே இருந்தாலும் அக்கறை இல்லையென்றால்,எங்கேயிருந்தாலும் மிக நல்லது தான் என்பது வெளிப்படை அல்லவா?
உங்களைப் பற்றி சிறிது அக்கறையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.வீணாக்காதீர்கள். கொஞ்சம் அக்கறை;பலன் மிக அதிகம்.ஏனெனில் கவனமாக இருக்கத் தொடங்கினால்,விழிப்புணர்வு தானாகவே வரத் தொடங்கும்.உள் விழிப்புணர்வு உனக்குள் வளரத் தொடங்கும்.
உங்கள் செயல்கள்,உங்கள் தெளிவை,உங்கள் அமைதியை,உங்கள் அழகை,உங்கள் நளினத்தைப் பிரதிபலிக்கும்.
நான் உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்யச் சொல்லவில்லை. இது உங்கள் மனித உரிமை.
ஆனால் வேறு யாரும் உன்னிடம் தரமுடியாது. நீயேதான் உரிமை கோர வேண்டும். அது ஒன்றும் அரசாங்கத்தின் கரங்களில்,அதன் சட்ட அதிகாரங்களில் இல்லை.அதெல்லாம் உதவாது.
உன்னிடமே நீயே சிறிது வேலை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும்,தன் சுய இருப்பை கண்டுகொள்ளவும்,உருவாக்கவும், சிறிது கலையுணர்வுடன் செயல்பட வேண்டும். அதற்கு அழகு,நளினம் மற்றும் புத்திசாலித்தனம் தரவேண்டும்.
ஆனால் மக்கள் முட்டாள்தனமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அதற்கு ஒரே காரணம், அவர்கள் பார்க்கும் மற்றவர்கள் யாவரும் அதே போலத்தான் வாழ்கிறார்கள்.ஆகவே இது சரியான பாதை. பெரும்பாலானவர்கள் தவறாக இருக்க முடியாதே.!!
--ஓஷோ--
Comments
Post a Comment