பூரண வெறுமை ஒன்றே வழி - OSHO
பூரண வெறுமை
ஒன்றே வழி
ஒஷோ,,,,
ஊன்றுகோல்கள் வழியடைப்பவை
எல்லா ஆதரவுகளையும் தூக்கி எறி
அப்புறம் அவனை நீ வரவேற்பாய்
திக்கற்றவர்களுக்கும் அவனே துணை
அவனைத் தவிர வேறு வழிகாட்டி இல்லை
எல்லா ஆசிரியர்களையும் ஒதுக்கித் தள்ளுங்கன்
உன்னை வெறுமையாக்கிக் கொள்ள அஞ்சாதே
அது தான் கதவு
அதுதான் பாதை
அது தான் குறிக்கோள்,,,
பூரண வெறுமையுடன் இருப்பவர்
முழுமையாய் நிரப்பப்படுவார்
இதுதான் ஆண்டவன் கணக்கு
எதையும் செய்ய முயலாதே
எதையாவது செய்வதன் மூலம்
அவனை நெருங்க முடியாது
மந்திரங்கள் ஓதியோ
கடுந்தவம் செய்தோ
வேதாந்தம் பேசியோ
அவனை அடைய முடியாது.
எதையாவது செய்வது என்பது ஓடுவது
ஒன்றும் செய்யாதது நிற்பது
ஆமாம்,,, அவன் தூரத்தில் இருந்தால்
ஓடிப்போய்ச் சந்திக்கலாம்
அவனோ மிக அருகில் இருக்கிறான்,,,
அவனை இழந்து விட்டால் தேடவும் வேண்டுமே
அவனை நாம் என்றும் இழக்கவே முடியாது,,,,
ஓஷோ,,,,,
-OSHO_Tamil
Comments
Post a Comment